டிவிட்டர் நிறுவனத்தை பிரபல தொழிலதிபரான எலன் மஸ்க் வாங்க முன் வந்திருக்கிறார்.
இது தொடர்பாக ட்விட்டர் நிறுவனத்தின் நிர்வாகக்குழு தலைவர் பிரெட் டெய்லருக்கு அவர் ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். ட்விட்டர் நிறுவனத்தின் 100 பங்களையும் வாங்க திட்டமிட்டு இருக்கும அவர் அந்தக்கடிதத்தில், “ ட்விட்டர் நிறுவனத்தின் ஷேர் ஒன்றை 54.20 டாலர் என்ற முறையில் ரொக்கமாக கொடுத்து வாங்க விருப்பம் தெரிவிக்கிறேன். சந்தையின் இறுதிநாளான ஏப்ரல் 1 ஆம் தேதிக்கு முன்னர் 38 சதவீதம் பிரீமியமாக தருகிறேன். என்னுடைய இந்த சலுகை சிறந்தது இறுதியானது. இதை ஏற்காவிட்டால், ட்விட்டரில் நான் பங்குதாரராக இருப்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டியதிருக்கும்.” என்று குறிப்பிட்டு இருக்கிறார். எலான் மஸ்கின் இந்த அறிவிப்பால் ட்விட்டர் நிறுவனத்தின் பங்குகள் சந்தையில் 12 சதவீதம் உயர்ந்துள்ளன.
அண்மையில் எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தில் 9 சதவீதத்துக்கும் அதிகமான பங்குகளை விலைக்கு வாங்கினார். இதனால் அவர் அதிகமான பங்குகளை வைத்திருக்கும் நபர் என்ற பெருமையை பெற்றார்.
இதனையடுத்து அவருக்கு ட்விட்டர் நிர்வாகக் குழுவில் சேருவதற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் அந்த அழைப்பை அவர் மறுத்துவிட்டார். இந்த நிலையில்தான் அவர் இப்படியான அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். முன்னதாக ட்விட்டர் நிறுவனத்தை கடுமையாக விமர்சித்து, அதற்கு மாற்றாக செயலியை ஒன்றை உருவாக்க இருப்பதாக எலன் மஸ்க் கூறி வந்தது குறிப்பிடத்தக்கது.