ஆளுநரின் தேநீர் விருந்து புறக்கணிப்பு.. சூடுபிடித்த தமிழக அரசியல் களம்... பின்னணி என்ன?

நீட் விலக்கு மசோதா தொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவியை அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் மா.சுப்ரமணியன் ஆகியோர் சந்தித்தனர்.

Continues below advertisement

இன்று கிண்டி ஆளுநர் மாளிகையில் மிகப்பெரிய அளவில் தேநீர் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.. இந்த விழாவில் நீதிபதிகள், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள், மத்திய அரசின் உயரதிகாரிகள், ஊடகங்களின் ஆசிரியர்கள் என 1000 பேர் வரையில் அழைப்புவிடுக்கப்பட்டு அவர்கள் கலந்துக் கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் இந்த தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆளுநரின் செயல்பாடுகள் மீதான  எதிர்ப்பின் வடிவமாகத்தான் இவ்வாறு புறக்கணித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

Continues below advertisement


ஏற்கெனவே ஆளுநரின் தேநீர் விருந்தை மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விசிக, மனிதநேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஆகிய கட்சிகள் புறக்கணிப்பதாக அறிவித்தன. ஆளுநர் ஒரு போட்டி அரசாங்கத்தை நடத்த விரும்புகிறார் என குற்றம்சாடிய நிலையில் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவித்தன. காங்கிரஸ் கட்சியும் தங்கள் தரப்பில் கலந்துக்கொள்ள மாட்டோம் என அறிவித்துள்ளது.

ஆளுநருக்கும் தமிழக அரசுக்கும் இடையே ஏற்கெனவே ஒரு உரசல் போக்கு நீடித்து வந்தது. அது பொதுவெளியில் பெரிதாக வெடிக்காத நிலையில் தற்போது முதன்முறையாக வெளிப்படையாக தெரியவந்துள்ளது. 

ஏற்கெனவே திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு தமிழக சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவை குடியரசுத்தலைவருக்கு அனுப்பாமல் நிலுவையில் வைத்திருந்த நிலையில்,  208 நாட்களுக்கு  பிறகு ஏ.கே. ராஜன் கமிட்டியின் அறிக்கை காமாலை கண்களுடன் தயாரிக்கப்பட்டுள்ளதாகக் கூறி தமிழக சட்டமன்றத்திற்கே திருப்பி அனுப்பி வைத்தார். தொடர்ந்து ஒரே வாரத்தில் அந்த மசோதா எந்த திருத்தமும் இல்லாமல் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டு ஆஅளுநருக்கு அனுப்பப்பட்டது.. அதன்பிறகு குடியரசுத்தலைவருக்கு அனுப்புங்கள் என் முதல்வர் மு.க.ஸ்டாலினும் ஆளுநரை நேரில் சந்தித்து கேட்டுக்கொண்டார். அப்போது டெல்லிக்கு அனுப்பி விடுவதாக ஆளுநர் உறுதியளித்ததாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் நீட் உட்பட 11 மசோதாக்கள் ஆளுநரிடம் நிலுவையில் உள்ள நிலையில் தமிழக அமைச்சர்கள் இன்று திடீரென நேரில் சந்தித்து பேசினர். ஆளுநரை சந்தித்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, மா.சு ஆகியோர்கள் இன்று நடைபெறும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக தெரிவித்தனர்.

அப்போது பேசிய அவர்கள், நூற்றாண்டு கண்ட தமிழக சட்டமன்றத்தின் மாண்பை குலைக்கும் வகையில் ஆளுநர் நடந்து வருவதாக குற்றமசாட்டினர். ஜணாநாயக மரபுப்படி செயலபடும் மிக உயர்ந்த அமைப்பான சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு மதிப்பு தரப்படவில்லை. நீட் விலக்கு மசோதா பரிசீலனையில் இருப்பதாக மட்டுமே ஆளுநர் தெரிவித்தார், மத்திய அரசுக்கு அனுப்பி வைப்பதற்க்கான காலவரையை ஆளுநர் தெரிவிக்கவில்லை என்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார். இதனிடையே பாஜக, அதிமுக ஆகிய கட்சிகள் கலந்துக் கொள்ளும் என கூறியுள்ளன. 

நிர்வாகம் சார்ந்த 11 மசொதாக்கள் ஆளுநரின் ஒப்புதலுக்காக காத்து கிடப்பது குறிப்பிடதக்கது
தற்போதைய நிலையை போலவே 1994-95ல் ஜெயலலிதா ஆட்சிக்ககாலத்தில்  ஆளுநராக இருந்த சென்னா ரெட்டியுடம் மோதல் போக்கு ஏற்பட்டது. அப்போது தேநீர் விருந்தை புறக்கணித்தார் ஜெயலலிதா. 

இப்போது பஞ்சாப் ஆளுநராக உள்ள பன்வாரிலால் புரோஹித் தமிழக ஆளுநராக இருந்தவரையில்  திமுக அரசுடன் பெரிதாக மோதல் போக்கு இருக்கவில்லை. அவருக்கு பிறகு வந்த ஆர். என் ரவியுடன் தற்போது நீண்ட காலத்திற்கு பிறகு உரசல் என்பது வெடித்துள்ளது. முன்னதாக நாடாளுமன்றத்திலும் ஆளுநரை திரும்பப் பெற வேண்டுமென திமுக சார்பில் வலியுறுத்தப்பட்டது. 

மஹராஷ்டிரா, மேற்கு வங்கம் கேரளா, தெலுங்கானா போன்ற மாநிலங்களில் அரசுக்கும் ஆளுநருக்கும் மோதல் போக்கு இருந்து வரும் சூழலில் தற்போது தமிழகத்திலும் அதே நிலை ஏற்பட்டுள்ளது. 

இதையடுத்து தமிழக அரசியல் களம் சூடிபிடித்துள்ளது. iந்த மோதல் தீவிர மடைய வாய்ப்புள்ளதாக கூறுகிறார்கள் அரசியல் விமர்சகர்கள்

Continues below advertisement
Sponsored Links by Taboola