அமேசான் தளத்தில் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் 2021 எனும் மாபெரும் சலுகை தின விற்பனை நேரலையில் இருக்கிறது. இந்த விற்பனையானது அக்டோபர் 3 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த சலுகை தின விற்பனையில் பல்வேறு தயாரிப்புகளுக்கும் சலுகைகள் வழங்கப்படுகின்றன. ஸ்மார்ட்போன்கள், லேப்டாப்கள், ஏர்பாட்ஸ்களில் தொடங்களில் எந்த ஒரு கேட்ஜெட்கள் வாங்க திட்டமிட்டிருந்தாலும் அதற்கு இது சரியான நேரமாகும். தற்காலத்தில் ஸ்மார்ட்போன்கள் பயன்பாடு அதிகரித்து வருகிறது. ஸ்மார்ட்போன்கள் என்று பார்க்கும் போது அதற்கான இணைப்பு பாகங்கள் என்பது முக்கியம். ஸ்மார்ட்போன்களுடன் பயன்படுத்தும் ஏர்போன்கள் பல்வேறு அம்சங்களோடு பல விலைப்பிரிவுகளில் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. 1500 ரூபாய்க்குள் வாங்கக்கிடைக்கும் பிராண்டட் வயர்லெஸ் ஏர்போன்களை காணலாம்.


அமேசான் தள்ளுபடியில் பொருட்களை வாங்க..


சோனி WI-C200


குறிப்பாக இந்த இரண்டு இயர்போன்களும் வெறும் 15கிராம் எடை கொண்டுள்ளது, பின்பு நெக்பேண்ட் இல்லாததால் இரு ஹெட்போன்களின் எடையும் மிக குறைவாக இருக்கிறது. இதனால் இசையை தொடர்ச்சியாக நீண்ட நேரம் கேட்டு ரசிக்கலாம். WI-C200 இயர்போன்கள் 15மணி நேரத்திற்கு பிளேபேக் வசதியும் குவிக் சார்ஜ் வசதியும் கொண்டுள்ளது. பேட்டரி குறையும் போது இயர்போன்களை பத்து நிமிடங்களுக்கு சார்ஜ் செய்தால் 60நிமிடங்களுக்கு பிளேபேக் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் முந்தைய விலை 2,200 ரூபாயாக உள்ளது, இந்த சேலில் 1,499 ரூபாய்க்கு கிடைக்கிறது. 



ரியல்மி பட்ஸ் வயர்லெஸ் 2 நியோ


ரியல்மி பட்ஸ் வயர்லெஸ் 2 நியோ, ரூ .1499 க்கு அறிமுகப்படுத்தப்பட்டது, இப்போது ரூ .1099 தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. இயர்போன்கள் 11.2 மிமீ டைனமிக் டிரைவர்களுடன் வருகின்றன. ரியல்மி பட்ஸ் வயர்லெஸ் 2 நியோ டைப்-சி சார்ஜிங்கை கொண்டுள்ளது. 17 மணிநேரம் வரை பேட்டரி லைஃப் கொண்டுள்ளது. இதில் நீண்ட நேரம் பயன்படுத்த கேம் மோட் வசதியும் உள்ளது, இதை ரியல்மீ கனெக்ட் ஆப்பின் மூலமும் இயக்கலாம்.


boAt Rockerz 245v2


இது தற்போது அமேசானில் ரூ .749 க்கு விற்கப்படுகிறது, ஆனால் 50 ரூபாய் கூடுதல் தள்ளுபடி கூப்பன் பயன்படுத்தினால் இதனை 699 ரூபாய்க்கு வாங்கலாம். இந்த விலை ரேஞ்சில் இந்த ஏர்போன் சிறந்ததாக உள்ளது. 12 மிமீ டைனமிக் டிரைவர்களால் இயங்கும் இந்த இயர்போன்கள் 8 மணிநேர பிளேபேக் நேரத்தை வழங்குகின்றன. boAt Rockerz 245v2 ஐபிஎக்ஸ் 5 தூசி மற்றும் நீர்-எதிர்ப்பு வசதி கொண்டுள்ளது ஆகும், இதனால் நீங்கள் ஜிம்மில் பயன்படுத்தலாம். இக்கருவியில் சவுண்ட் கண்ட்ரோல் மற்றும் அழைப்புகளுக்கு ஒரு மைக்கிற்கான இன்-லைன் பட்டன்கள் உள்ளன.



ரெட்மி பட்ஸ் 2C


600 ரூபாய் பெரும் தள்ளுபடியுடன் இப்போது ரூ. 899 க்கு கிடைக்கிறது. இது மிகவும் மலிவான TWS சாதனங்களில் ஒன்றாகும், இந்த விலையில், ஏர்பட்ஸ் வாங்க நினைப்பவர்கள் இதனை கண்ணைமூடிக்கொண்டு தேர்வு செய்யலாம். TWS இயர்போன்கள் ப்ளூடூத் 5.0 ஆதரவுடன் வருகின்றன மற்றும் IPX4 மதிப்பிடப்பட்டுள்ளன. இயர்பட்ஸ் 4 மணிநேரம் மியூசிக் பிளேபேக்கை வழங்குகிறது, ஆனால் அது சார்ஜிங் கேஸுடன் 12 மணிநேரம் வரை ஓடும்.


நாய்ஸ் டியூன் சார்ஜ் நெக்பேண்ட்


இந்த மாடல் ஏர்போன் சிறந்த தெளிவான ஆடியோவிற்காக குவால்காம் 3003 சிப்செட் கொண்டுள்ளது. இது நல்ல பாஸ் வெளியீட்டை வழங்கவும் டியூன் செய்யப்பட்டுள்ளது. நெக் பேண்ட் ஐபிஎக்ஸ் 5 இதில் மதிப்பிடப்பட்டுள்ளது, எனவே இது வியர்வையையும் லேசான மழையையும் உள்ளே செல்லாமல் தடுக்கும். இதனை ஒரே நேரத்தில் இரண்டு சாதனங்களுடன் இணைக்க முடியும், இந்த மாடலில் ஒரு பயனுள்ள அம்சமாகும். நாய்ஸ் டியூன் சார்ஜ் நெக் பேண்ட் 16 மணிநேர பேட்டரி ஆயுளைக் கொண்டுள்ளது. இந்த அமேசான் சேலின் ஒரு பகுதியாக சாதனம் ரூ .1099 தள்ளுபடி விலையில் விற்கப்படுகிறது.