பிஎம்டபிள்யூ (BMW) நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய எக்ஸ் 7 டார்க் ஷேடோ (Dark Shadow) என்ற புதிய எடிஷன் எஸ்யூவியை அறிமுகம் செய்துள்ளது. தற்போது இந்த வாகனத்திற்கான ஆன்லைன் புக்கிங் தொடங்கி நடைபெற்று வருகிறது. அமெரிக்காவில் உள்ள ஆலையில் உற்பத்தி செய்யப்படும் இந்த ரக கார்களை பிஎம்டபிள்யூ நிறுவனம் CBU என்ற முறையில் இங்கு இறக்குமதி செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த BMW X7 Dark Shadow கார்கள் முழுக்கமுழுக்க ப்ரீமியம் எடிஷன் வகையை சேர்ந்தது. இந்திய சந்தையில் இதன் விலை 2.02 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.



 






1916ஆம் ஆண்டு ஜெர்மனியில் தொடங்கப்பட்டது தான் பிஎம்டபிள்யூ நிறுவனம். இந்த பிஎம்டபிள்யூ நிறுவனம் தனது 90வது ஆண்டு விழாவின்போது தான் இந்திய சந்தையில் கால்பதிக்க முடிவெடுத்தது. அதனை தொடர்ந்து கடந்த 2006ஆம் ஆண்டு அதற்கான பணிகள் தொடங்கப்பட்டு 29 மார்ச் 2007 ஆம் ஆண்டு பிஎம்டபிள்யூ நிறுவனம் தனது உற்பத்தி ஆலையை சென்னையில் தொடங்கியது குறிப்பிடத்தக்கது. சென்னையில் தொடங்கப்பட்ட அந்த ஆலையில் 10க்கும் அதிகமான BMW கார் வகைகள் உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. BMW 3,5,6 மற்றும் 7 சீரிஸ் கார்கள் தொடங்கி X1,3 போன்ற ரக கார்களும் சென்னையில் தயாரிக்கப்பட்டு வருகின்றது.


McLaren India Launch | அசத்தல் வடிவமைப்பு.. அதிவேகம்.. இந்திய சந்தையில் கால்பதிக்கும் மெக்லாரென்.!






இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள பிஎம்டபிள்யூ 7 டார்க் ஷேடோ எடிசன் என்பது இந்த வகை கார்களை விட சுமார் 36 லட்சம் ரூபாய் அதிகமாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதற்கு ஏற்ப கூடுதலாக பல அம்சங்கள் இந்த காரில் இடம்பெற்றுள்ளது. உலக அளவிலேயே வெறும் 500 யூனிட்டுகள் மட்டுமே தயாரிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தியாவிற்கும் குறைந்த அளவிலான புக்கிகள் மட்டுமே ஏற்கப்படுகிறது. இதன் இன்ஜின் திறனை பார்க்கும்பொழுது மூன்று லிட்டர் இன்லைனுடன் ஆறு சிலிண்டர் கொண்ட க்வாட் டர்போ டீசல் இன்ஜின் வகையைச் சார்ந்ததாக இந்த வாகனம் உருவாக்கப்பட்டுள்ளது. 






கடந்த சில மாதங்களாக பல முன்னனி கார் மற்றும் பைக் நிறுவனங்கள் தங்களுடைய பல முன்னனி எடிஷன் கார் மற்றும் பைக்களை இந்தியாவில் அறிமுகம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது. செல்போன்கள், கார்கள் மற்றும் பைகளின் விற்பனை இந்த ஊரடங்கு காலத்திலும் உச்சம் தொட்டு வருவது நினைவுகூரத்தக்கது.