கடந்த திங்கள்கிழமை பிற்பகல், 77 வயதான பல்வீர் கவுர் தனது வீட்டில் இருந்து தனது காரில் ஓட்டுநருடன் அருகிலுள்ள சந்தைக்குச் சென்றுள்ளார். அப்போது பொருட்கள் வாங்க அந்த டிரைவர் காரில் இருந்து இறங்கியுள்ளார். ஆனால் ஏர் கண்டிஷனிங் சிஸ்டம் தொடர்ந்து இயங்குவதாக அவர் வண்டி என்ஜினை நிறுத்தாமல் தொடர்ந்து இயங்கும் வண்ணம் வைத்துவிட்டு சென்றுள்ளார்.
இந்நிலையில் அந்த வழியாக வந்த வாலிபன் ஒருவன் வண்டியை அந்த மூதாட்டியோடு திருடி சென்றுள்ளார். கடையை விட்டு வெளியே வந்த காரின் ஓட்டுநர் மூதாட்டியோடு கார் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்து போலீசில் புகார் அளித்துள்ளார். இந்நிலையில் சிறுது தூரம் காரை ஓட்டிச்சென்ற அந்த திருடன் ஓர் இடத்தில் அந்த மூதாட்டியை இறக்கிவிட்டு 'ஆண்ட்டி ஜி, உங்களை காயப்படுத்த நான் விரும்பவில்லை. உங்கள் முகவரியை தாருங்கள் நாளை நிச்சயம் உங்கள் வீட்டிற்கு வந்து வண்டியை தருகிறேன்' என்று கூறிவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளார்
அஜித் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது!
அதன் பிறகு தனது டிரைவரை தொடர்பு கொண்டு வீடு திரும்பியுள்ளார் பல்வீர் கவுர். போலீஸ் அவர் அளித்த புகாரின் அடிப்படையில் அடையாளம் தெரியாத அந்த நபர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு அந்த திருடனை போலீசார் தேடி வருகின்றனர். கவுர் அமெரிக்காவில் தனது குடும்பத்துடன் வசித்து வருவதாகவும், தற்போது மாடல் டவுனில் உள்ள தனது வீட்டில் உள்ள அவர் சம்பவத்தன்று தனது தொலைபேசியை விற்க அருகிலுள்ள வருமான வரி காலனி சந்தைக்கு சென்றதாகவும் விசாரணையில் கூறியுள்ளார்.
திருடனை போலீசார் தேடிவரும் நிலையில் தற்போது வரை அந்த கார் வீடு திரும்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.