நாள்: 24.05.2022
நல்ல நேரம் :
காலை 6.30 மணி முதல் காலை 7.30 மணி வரை
மாலை 4.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை
கௌரி நல்ல நேரம் :
மதியம் 1.30 மணி முதல் மதியம் 2.30 மணி வரை
மாலை 7.30 மணி முதல் மாலை 8.30 மணி வரை
இராகு :
மதியம் 3 மணி முதல் மதியம் 4.30 மணி வரை
குளிகை :
மதியம் 12 மணி முதல் மதியம் 1.30 மணி வரை
எமகண்டம் :
காலை 9 மணி முதல் காலை 10.30 மணி வரை
சூலம் – வடக்கு
மேஷம் :
மேஷ ராசி நேயர்களே, இன்று அதிர்ஷ்டம் காணப்படும் நாள். திருப்திகரமான பலன்கள் கிடைக்கும் சாதகமான நாள். உங்கள் பெற்றோரின் ஆதரவு கிடைக்கும்.அது உங்களுக்கு மகிழ்ச்சிகரமாக இருக்கும்.
ரிஷபம்:
ரிஷப ராசி நேயர்களே, இன்று எதிர்பாராத வரவுகளும் வெற்றியும் கிடைக்கும் நாள். புத்திசாலித்தனத்தை பயன் படுத்துவதன் மூலம் அதிகம் சாதிக்கலாம்.
மிதுனம் :
மிதுன ராசி நேயர்களே, இன்று கவனமாகக் கையாள வேண்டிய கடினமான சூழ்நிலைகள் காணப்படும். இசை கேட்பது மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதன் மூலம் மன ஆறுதல் பெறலாம்.
கடகம் :
கடக ராசி நேயர்களே, இன்று திருப்திகரமான பலன்கள் கிடைக்காது. உங்கள் இலக்குகளை திட்டமிட்டு திறமையாக நடத்த வேண்டும். இன்று முக்கிய முடிவுகள் எடுக்க உகந்த நாள் அல்ல.
சிம்மம்:
சிம்ம ராசி நேயர்களே, இன்று உங்கள் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் சாதகமான நாள். கடின உழைப்பு மற்றும் இடைவிடாத முயற்சி மூலம் லாபகரமான பலன்கள் கிடைக்கும். இது உங்கள் வளர்ச்சியை மேம்படுத்தும்.
கன்னி :
கன்னி ராசி நேயர்களே, இன்று முன்னேற்றகரமான பலன்கள் கிடைக்கும். புத்திசாலித்தனத்தை பயன்படுத்தி உங்கள் முயற்சிகளில் வெற்றி காணலாம். மொத்தத்தில் இன்று மகிழ்ச்சியான் நாள்.
துலாம் :
துலாம் ராசி நேயர்களே, இன்று உங்கள் செயல்களில் கவனமாக இருக்க வேண்டும். சாதகமான பலன்கள் கிடைக்க கடினமான சூழ்நிலைகளை கவனமாக கையாள வேண்டும். இசை கேட்டல் மற்றும் தியானம் மேற்கொள்வதன் மூலம் ஆறுதல் கிடைக்கும்.
விருச்சிகம் :
விருச்சிக ராசி நேயர்களே, இன்று சாதகமான பலன்கள் கிடைக்காது. நீங்கள் எளிதில் உணர்ச்சிவசப்படுவீர்கள். முடிவுகளை விரைந்து எடுப்பீர்கள். இதனால் பிரச்சினை ஏற்படுத்தும் சூழ்நிலை காணப்படும். உங்கள உங்கள் உணர்ச்சிகளை கட்டுப்படுத்துவதன் மூலம் சிறந்த பலனைக் காணலாம்.
தனுசு :
தனுசு ராசி நேயர்களே, உங்கள் வளர்ச்சிக்கு உதவும் முயற்சிகளை எடுக்க இன்றைய நாள் சாதகமாக உள்ளது. உங்கள் இலக்குகள் நிறைவேறும். திருப்தியும் நல்ல உணர்வும் உங்களிடம் இன்று காணப்படும்.
மகரம் :
மகர ராசி நேயர்களே, இன்று குழப்பங்களும் வருத்தமான மன நிலையும் காணப்படும். இன்றைய நாளை சமாளிக்க நீங்கள் அமைதியுடனும் கட்டுப்பாட்டுடனும் இருக்க வேண்டும்.
கும்பம்:
கும்ப ராசி நேயர்களே, இன்று சீரான பலன்கள் கிடைக்காது. சவால்களை சந்திக்க வேண்டிய சூழ் நிலை காணப்படும். நீங்கள் பொறுமையுடனும் திறமையுடனும் இதனைக் கையாள வேண்டும். தான தருமங்கள் போன்ற தொண்டு நடவடிக்கைகளில் ஈடுபடுவதன் மூலம் மன அமைதி பெறலாம்.
மீனம்:
மீன ராசி நேயர்களே, இன்று முன்னேற்றகரமான பலன்கள் கிடைக்காது. பொறுமையுடன் இருந்தால் பல நன்மைகளைக் காணலாம். வெறுமை இருப்பது போன்ற உணர்வு காணப்படும். தியானம் மேற்கொள்வதன் மூலம் இந்த சூழ்நிலையை சமாளித்து அமைதி பெறலாம்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்