ஏப்ரல் 15 ஆம் தேதி முதல், ட்விட்டர் வாக்கெடுப்பில் வெரிஃபைடு ட்விட்டர் கணக்குகள் மட்டுமே வாக்களிக்க முடியும் என்று அதன் உரிமையாளர் எலான் மஸ்க் கூறியுள்ளார்.


வாக்களிக்க வெரிஃபைடு வேண்டும்


இது சமூக ஊடக தளத்தில் மேம்பட்ட AI போட்களை நிவர்த்தி செய்வதற்கான எளிய வழி என்று ட்விட்டர் CEO மஸ்க் நம்புகிறார். மேலும் ஏப்ரல் 15 முதல் ப்ளூ டிக் பெற்ற கணக்குகளின் டீவீட்ஸ் மட்டுமே 'for you' என்று ட்விட்டரே பரிந்துரைக்கும் டீவீட்ஸ் பட்டியலில் இடம்பெறும் என்றும் அவர் அறிவித்தார். "ஏப்ரல் 15 முதல், சரிபார்க்கப்பட்ட கணக்குகள் மட்டுமே 'for you' பரிந்துரைகளில் இடம்பெற தகுதிபெறும். இதுவே AI போட் செயல்பாடுகளை அகற்றுவதற்கான ஒரே எளிய வழி. வாக்கெடுப்புகளில் வாக்களிப்பதற்கு அதே காரணத்திற்காக வெரிஃபைடு தேவைப்படும்," என்று மஸ்க் ட்வீட் செய்துள்ளார்.



இனி பணம் கட்டினால் மட்டுமே ப்ளூ டிக்


முன்பிலிருந்தே வெரிஃபைடு கொண்ட அனைத்து பயனர்களும் அடுத்த மாதம் தங்கள் பேட்ஜ்களை இழப்பார்கள் என்று மஸ்க் கடந்த வாரம் வெளிப்படுத்தியதை அடுத்து இந்த அறிவிப்பு வந்துள்ளது. ட்விட்டர் ப்ளூவில் மாதத்திற்கு $8 க்கு பதிவு செய்பவர்கள் மட்டுமே தங்கள் ப்ளூ டிக்கை தக்க வைத்துக் கொள்ள முடியும். "ஏப்ரல் 1 ஆம் தேதி முதல், கட்டமின்றி முன்பே சரிபார்க்கப்பட்ட திட்டத்தை முடக்கி, அந்த ப்ளூ டிக் செக்மார்க்குகளை அகற்றுவோம்," என்று Twitter கூறியது.


தொடர்புடைய செய்திகள்: Congress Mps Resign : ’ராகுல்காந்தி தகுதி நீக்கத்திற்கு எதிர்ப்பு’ காங்கிரஸ் எம்.பிக்கள் கூண்டோடு ராஜினாமா செய்ய முடிவு ?


ப்ளூ டிக் மட்டுமே அதிக கவனம் பெறும்


ட்விட்டரில் நீல நிற சரிபார்ப்பு அடையாளத்தை வைத்திருக்க, தனிநபர்கள் 'Twitter Blue' இல் பதிவு செய்ய வேண்டும். நிறுவனங்கள் 'verified company' யில் பதிவு செய்யலாம் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் 'Following' டேபில் பின்தொடரும் கணக்குகளின் ட்வீட்களை பார்க்க முடியும், மேலும் ப்ளூ டிக் அல்லாத கணக்குகளின் ட்வீட்களை பிற பகுதிகளில் பார்க்க முடியும். ஆனால் இதன்மூலம் அதிக கணக்குகளை பணம் செலுத்தி ப்ளூ டிக் வாங்கத் தூண்டும் மற்றும் சந்தாக்களில் இருந்து ட்விட்டரின் வருவாயை அதிகரிக்கும் செயலாகும்.



இரண்டாக பிரிக்கப்பட்ட டைம்லைன்


அல்காரிதமிக் டைம்லைன் ஜனவரியில் வெளியிடப்பட்டது, பயனர்கள் தாங்கள் பின்பற்றாத பயனர்களின் பிரபலமான ட்வீட்களைப் பார்ப்பதற்கான விருப்பத்தை பயனர்களுக்கு ட்விட்டர் வழங்குகிறது. அதே நேரத்தில் ட்விட்டரில் ஃபாலோயர்ஸ் டேபும் உள்ளது, இதில் பயனர்கள் தாங்கள் பின்தொடரும் கணக்குகளின் ட்வீட்களை மட்டும் கண்டு வருகின்றனர்.


பிரபலங்கள், அரசியல்வாதிகள், நிறுவனங்கள் மற்றும் பிராண்டுகள், செய்தி நிறுவனங்கள் மற்றும் பிற "பொது நலன்" கணக்குகள் உண்மையானவையா? ஏமாற்றும் கணக்குகளா? என்பதை அடையாளம் காண 2009 இல் ட்விட்டர் முதன்முதலில் சரிபார்க்கப்பட்ட கணக்குகளை அறிமுகப்படுத்தியது. நிறுவனம் முன்பு சரிபார்ப்புக்கு கட்டணம் வசூலிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.