ஏ லாட் மோர் கேன் ஹேப்பன் ஓவர் காஃபி... இது ஒரு பிரபல காபி செயின் ரெஸ்ட்ரான்ட்டின் டேக் லைன். இது ஒரு வகையில் உண்மையும் கூட.தலைவலி, டென்ஷன், சந்தோஷன், திடீர் பசி, புதிய நட்பு, அன்றலர்ந்த காதல் என இப்படி பல தருணங்களில் மனிதர்களுக்கு முதலில் நினைவுக்கு வருவது காபி தான். உலகம் முழுவதுமே காபி அருந்தும் பழக்கம் பரந்து விரிந்து கிடக்கிறது. அப்படிப்பட்ட காபி இளைஞர்களின் விருப்ப பானமாகவும் இருக்கிறது.


அதற்கான காரணம் என்னவென்று பார்ப்போம்:


அறிவாற்றலை அதிகரிக்கும்


காபி ஏன் இளைஞர்களுக்குப் பிடிக்கிறது என்றால் அதில் உள்ள கஃபைன் அவர்களுக்கு ஒரு உத்வேகம் தருகிறது. அவர்கள் பாஷையிலேயே சொல்ல வேண்டுமென்றால் அது தான் எனர்ஜி கிக். ஒரு நீண்ட வேலைப்பளு மிகுந்த நாளாகாட்டும், பரீட்சைக்கு கடைசி நேர ஆயத்த நாளாகட்டும் கஃபைன் ஒரு மாயம் செய்யத்தான் செய்கிறது.


அமெரிக்க உணவு மற்றும் மருந்துக் கழகம் நாளொன்றுக்கு 400 மிலி கிராமுக்குக் கூடுதலாக கஃபைன் எடுத்துக் கொள்ளக் கூடாது என்று எச்சரித்துள்ளது. அதாவது நாளொன்றுக்கு 5 கோப்பைகளுக்கு மேல் காப்பி அருந்தக் கூடாது, என்றும் பெற்றோர் கஃபைன் ஆபத்துகளை குழந்தைகளுக்கு எடுத்துரைக்க வேண்டும் என்றும் எச்சரித்துள்ளது. ஆகையால் இதையும் இளைஞர்கள் நினைவில் கொள்வது நல்லது.


சுறுசுறுப்பைத் தரும்:


காபியில் கஃபைன் மூளைக்கு சுறுசுறுப்பைத் தருவதால் உடல் உற்சாகமாக இயங்கத் தொடங்கும். காரணம் ஒரு கோப்பை காபிக்குப் பின்னர் உடலின் அட்ரினல் அளவு அதிகரிக்கிறது. கூடவே இதய துடிப்பு, ரத்தக் கொதிப்பு, ரத்த ஓட்டம் என எல்லாமே அதிகரிக்கும்.


ஆன்ட்டி ஆக்ஸிடன்ட்ஸ் கொண்டது:


காபியில் எல்லாமே கெட்டது தானா என்று காபி பிரியர்கள் கொந்தளிப்பது கேட்கிறது. அப்படியல்ல. நாங்கள் சொல்ல நினைப்பது அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது மட்டுமே. காபியில் ஆன்ட்டி ஆக்ஸிடன்ட்ஸ் அதிகமாக உள்ளது. அது ஃப்ரீ ரேட்டிகல்ஸ் ஏற்படுத்தும் செல் சிதைவை தவிர்க்கிறது. அதனால் அளவான காபி ஆரோக்கியத்திற்கு நன்மையே.


மன அழுத்தம் குறையும்:


காபியால் மன அழுத்தத்தை குறைக்க முடியும் என்றால் நம்புவீர்களா? ஆனால் காபியில் உள்ள கஃபைன் மன அழுத்ததைப் போக்கி மூட் ஸ்விங்க்ஸை தவிர்க்கும்.


ஜீரணத்திற்கு உதவும்


காபி வயிறு மற்றும் கல்லீரல் அமிலங்கள் உற்பத்தியில் உதவும். இதனால் ஜீரணம் குணமாகும். இது ஜீரணக் கோளாறு, ஆசிட் ரிஃப்ளக்ஸ், மலச்சிக்கல் உள்ளவர்களுக்கு மருந்தாகவும் இருக்கிறது. 


காபியில் காணப்படும் கஃபைன், பாலிபினால்கள் மற்றும் பிற இயற்கை பொருட்கள், டைப் 2 நீரிழிவு (T2D) உள்ள அதிக எடை கொண்டவர்களில், ஆல்கஹால் அல்லாத கொழுப்பு கல்லீரல் நோயின் (NAFLD) தீவிரத்தை குறைக்க உதவும் எனக் கண்டறியப்பட்டுள்ளது.