2022ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் வரும் 26ஆம் தேதி மும்பையில் தொடங்குகிறது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து விளையாடுகிறது. ஐபிஎல் போட்டிகள் தொடங்க இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் ரசிகர்கள் இடையே பெரும் எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது. இப்போதெல்லாம் கிரிக்கெட் என்றால் டிவி முன்னால் உட்கார வேண்டிய அவசியமே இல்லாமல்போய்விட்டது. 


கையில் செல்போனை வைத்துக்கொண்டு ஓடிடி சப்ஸ்கிரைப் இருந்தால் போதும் லைவாக பார்த்துக்கொண்டே இருக்கலாம். குறிப்பாக ஹாட்ஸ்டாரில் ஐபிஎல்லை கோடிக்கணக்கானவர்கள் பார்த்து ரசிப்பார்கள். இந்நிலையில் நீங்கள் ஜியோ வாடிக்கையாளர் என்றால் ஐபிஎல்க்காகவே சில ஆபர்களை ஜியோ கொடுத்துள்ளது. இந்த சில ரீசார்ஜ்களை நீங்கள் செய்தால் இணையவசதியோடு சேர்த்து டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரையும் பார்த்து ரசிக்கலாம்.


ஜியோவின் ப்ளான்கள்..


ஜியோவின் ரூ.399 போஸ்ட்பெய்ட் திட்டத்தில்  75 ஜிபி அதிவேக டேட்டா வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 200 ஜிபி வரை டேட்டாவை ரோல் ஓவர் செய்யலாம். டேட்டா முடிந்துவிட்டால் ரூ.10-க்கு 1 ஜிபி டேட்டா ஆட் ஆனாக வழங்கப்படும். இந்த ரீசார்ஜ் திட்டத்தில் அமேசான், நெட்ஃபிலிக்ஸ் மற்றும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஆகிய ஓடிடி தளங்களுக்கான இலவச சந்தா வழங்கப்படும். 


28 நாட்களுக்கான ரூ.601 ரீசார்ஜ் திட்டத்திலும் இலவச டிஸ்னி ஹாட் ஸ்டார் சந்தா வழங்கப்படுகிறது. ஒரு நாளைக்கு 3 ஜிபி என்ற இந்த ரீசார்ஜ் செய்தால் ஐபிஎல்லை இலவசமாக பார்க்கலாம்.


84 நாட்களுக்கு தினமும் 2ஜிபி என்ற ரூ.1499 ரீசார்ஜ் திட்டத்திலும் டிஸ்னி ஹாட் ஸ்டார் ப்ரீமியம் சந்தா இலவசமாக கொடுக்கப்படுகிறது.


தினமும் 3ஜிபி டேட்டா வருடம் முழுவதும் வேண்டுமென்றால் ஜியோவின் ரூ.4199 ரீசார்ஜை செய்யலாம்.  இத்துடன் 1 வருடத்துக்கான டிஸ்னி ஹாட் ஸ்டார் சந்தா ப்ரீமியம் இலவசமாக கொடுக்கப்படுகிறது.


ஐபிஎல் விவரம்:


இந்த ஆண்டுக்கான போட்டிகள் மும்பையில் மார்ச் 26ம் தேதி தொடங்கி மே 29ம் தேதி முடிவடையும் என ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் படேல் தெரிவித்துள்ளார். இந்த 2022 தொடரில் இரண்டு புதிய அணிகளான லக்னோ சூப்பர்ஜெயன்ட்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் லீக்கில் சேர்க்கப்பட்டால், மொத்தம் 74 போட்டிகள் நடைபெறும் என்றும், போட்டியின் தொடக்கத்தில் சுமார் 40 சதவீதம் பேர் மைதானங்களில் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.


மேலும், மார்ச் 26ஆம் தேதி சனிக்கிழமை ஐபிஎல் தொடங்கும். அனைத்து போட்டிகளும் மும்பையின் வான்கடே ஸ்டேடியம் மற்றும் பிரபோர்ன் ஸ்டேடியம் மற்றும் நவி மும்பையின் டி.ஒய்.பாட்டீல் மைதானம் மற்றும் புனேவில் உள்ள கஹுஞ்சே மைதானத்தில் நடைபெறும். வான்கடே மற்றும் DY பாட்டீலில் தலா 20 ஆட்டங்களும், பிரபோர்ன் மற்றும் கஹுஞ்சே மைதானத்தில் தலா 15 ஆட்டங்களும் நடத்தப்படும் என்றார். 


அதேபோல், பிளே-ஆஃப் குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை, ஆனால் இறுதிப் போட்டியை அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடத்த வாய்ப்புள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.