மக்களால் அதிகம் பயன்படுத்தக்கூடிய தொலைத் தொடர்பு நிறுவனங்கள் ஏர்டெல், ஜியோ ஆகியவை ப்ரீபெய்ட் திட்டங்களில் பல்வேறு சலுகைகளை அளித்துள்ளது. இவை ஒரே மாதிரியான திட்டங்களாக இருந்தாலும் ஒரளவிற்கு மாறுதல்களை கொண்டுள்ளன. அதாவது ஏர்டெல் சேவையில் ரூ.599 க்கு ரீசார்ஜ் செய்தால், டிஸ்னி + ஹாட்ஸ்டார் நன்மைகள் 56 நாட்கள் வரை கிடைக்கிறது. ஆனால் இதே தொகைக்கு  JIO மற்றும் VI வில் 84 நாட்களுக்கு செல்லுபடியாகும் வகையில் சேவை தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.


ஊரடங்கு காலம் என்பதால் தற்போது அதிகளவில் மக்கள் மொபைல்போன்களை பயன்படுத்தி வரும் நிலையில் பல்வேறு ப்ரீபெய்ட் சலுகைகள் குறித்து தற்போது பார்க்கலாம்.


ஏர்டெல் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டம்:


ஏர்டெல் சேவையில் ரூ.599 க்கு ரீசார்ஜ் செய்யும் போது, தினமும் டிஸ்னி+`ஹாட்ஸ்டாருடன் (Disney+ Hotstar) 2 ஜிபி இணைய சேவை கிடைக்கிறது.  மேலும் 56 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ள இந்த சேவையில் தினமும் அன்லிமிடெட் கால்ஸ் மற்றும் 100 எஸ்எம்எஸ் தரப்படுகிறது. மேலும் இந்த திட்டத்தின் கூடுதல் நன்மைகளாக Wynk Music, Airtel Xstream Premium, அமேசான் பிரைம் வீடியோ மொபைல் எடிஷன் போன்றவையும் Apollo 24 | 7  இலவச ஹலோ ட்யூன்ஸ் மற்றும் Cashback கிடைக்கிறது.


ஜியோ ரூ.599 ப்ரீபெய்ட் திட்டம்:


ஜியோவில் 599 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்யும் போது 2 ஜிபி இணைய சேவை கிடைக்கப்பெறுவதோடு, 84 நாட்கள் செல்லுப்படியாகும் வகையில் உள்ளது. மேலும் நாட்டில் எந்த நெட்வொர்க்குக்கும் வரம்பற்ற உள்நாட்டு அழைப்புகளை அழைக்கலாம் எனவும் உள்ளது.


500 ரூபாய்க்கு குறைவான தொகையில் நாள் ஒன்றுக்கு 3 ஜிபி டேட்டா தேடும் வாடிக்கையாளர்களுக்கு வசதியாகவும் பல்வேறு சலுகைகள் தற்போது அறிமுகமாகியுள்ளது. அதன்படி,


ஜியோ ரூ. 401 ப்ரீபெய்ட் திட்டம்:


இந்தத் திட்டம் 90 ஜிபி தரவை 28 நாட்களாக தருகிறது. மேலும் இத்திட்டம் திட்டம் JIO இலிருந்து எந்த நெட்வொர்க்குக்கும் வரம்பற்ற உள்நாட்டு அழைப்புகளை கொண்டிருக்கிறது. இதோடு இந்த திட்டம் JIO பயன்பாடுகளுக்கு சலுகை அளிக்கும் வகையில் ஒரு வருட டிஸ்னி ஹாட்ஸ்டார் மற்றும் 1 வருட ஹாட்ஸ்டார் விஐபியையும் வழங்குகிறது.


ஏர்டெல் ரூ. 448 ப்ரீபெய்ட் திட்டம்:


ஏர்டெல் ரூ. 448 ப்ரீபெய்ட் திட்டத்தின் மூலம், அன்லிமிடெட் கால் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும் வகையில் உள்ளது. மேலும் தினமும் 3 ஜிபி டேட்டா வழங்குவதோடு, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் கிடைக்கப்பெறுகிறது. இதோடு டிஸ்னி + ஹாட்ஸ்டார், பிரதான வீடியோ மொபைல் பதிப்பு, ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம், மற்றும் Wynk இசை ஆகியவை இச்சேவையில் கிடைக்கப்பெறுகிறது.