Apple WWDC 2024: ஆப்பிள் நிறுவனத்தின் iOS 18 இயங்குதளத்துடன், புதிய தனிப்பயனாக்குதல் அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது பயனர்கள் செயலிகளின் ஐகான்களின் நிறத்தை மாற்றி அமைக்க உதவுகிறது.


iOS 18-ஐ அறிமுகப்படுத்திய ஆப்பிள் நிறுவனம்:


நேற்று நடைபெற்ற ஆப்பிள் நிறுவனத்தின் வருடாந்திர உலகளாவிய டெவலப்பர்கள் மாநாட்டில்  (WWDC) 2024, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட iOS 18 ஐ அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது. iOS 18 உடன் புதிய கஸ்டமைசேஷன் எனப்படும் தனிப்பயனாக்குதல் அம்சமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது பயனர்கள் தங்கள் ஆப்பிள் டிவைஸ்களில் உள்ள அனைத்து செயலிகளின் ஐகான்களின் நிறத்தையும் மாற்றி அமைக்க அனுமதிக்கிறது. மேலும், பயனரின் வால்பேப்பர் வண்ணத் திட்டத்தின் அடிப்படையில், iOS வண்ணங்களை பரிந்துரைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தனிப்பயனாக்கல் அம்சம்:


iOS மூலம் வால்பேப்பர்கள், விட்ஜெட்டுகள் மற்றும் ஐகான்களைத் தனிப்பயனாக்குவதை மட்டுமின்றி, iPhone பயனர்கள் தங்கள் வால்பேப்பர்களை சிறப்பாக காட்சிப்படுத்தும் வகையில் செயலிகள் மற்றும் விட்ஜெட்களை பட்டியலிடலாம். மேலும், அவற்றை எளிதாக அணுகும் வகையில் பக்கவாட்டில் அல்லது அடிப்பகுதிக்கு சற்று மேலே வைக்கலாம். கூடுதலாக, டார்க் மோடுக்கு புதிய தோற்றம் கொடுக்கப்பட்டுள்ளது.


iOS 18 உடன் பிரைவசி:


தனியுரிமையை மையமாகக் கொண்டு, iOS 18 இல் உள்ள பயனர்கள் தங்கள் செயலிகளை லாக் செய்ய முடியும். அத்தகைய செயலிகளை அணுக பாஸ்வார்ட் அல்லது ஃபேஸ் ஐடி தேவைப்படும். லாக் செய்யப்பட்ட செயலிகளின் தரவுகள் தேடல்கள் அல்லது பிற பயன்பாடுகளில் தோன்றாது. கூடுதலாக, பயனர்கள் டேட்டிங் செயலிகள் போன்றவற்றை, லாக் செய்யப்பட்ட பாதுகாப்பான, மறைக்கப்பட்ட ஃபோல்டரில் மறைக்க முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


தற்போத சூழலில், ​​உங்கள் தொடர்புகளுக்கான பயன்பாட்டு அணுகலை செயலிகளுக்கு, வழங்குவது என்பது உங்கள் முழுப் பட்டியலையும் பகிர்வதாகும். ஆனால், iOS 18 உடன் பயனர்கள் பகிர்வதற்கு குறிப்பிட்ட தொடர்புகளைத் தேர்வுசெய்ய முடியும். iOS 18 உடன், ஐபோன்கள் சேட்டிலைட் வழியாக SMS செய்தி அனுப்புதலை ஆதரிக்கும்.


'மிகப்பெரிய மறுவடிவமைப்பு' பெறும் ஃபோடோஸ் செயலி:


ஆப்பிள் நிறுவன அறிவிப்பின்படி, ஃபோட்டோஸ் செயலி அதன் "மிகப்பெரிய மறுவடிவமைப்பை" பெறுகிறது. புதிய அப்டேட்டானது பயனர்கள் தங்கள் லைப்ரெரியை ஒழுங்கமைக்க உதவுகிறது மற்றும் புகைப்படங்களைக் கண்டுபிடிப்பதை எளிதாக்குகிறது. புதிய அப்டேட்டுடன் கேம் மோட் ஐபோனுக்கு வருகிறது. இது உயர் செயல்திறனை பராமரிக்க செயலிகளின் பின்னணி செயல்பாட்டைக் குறைக்கும். இது ஏர்பாட்கள் மற்றும் கேம் கன்ட்ரோலர்களின் ரெஸ்பான்சிங் திறனையும் மேம்படுத்துவதாக ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.


டேப்-பேக் (Tap Backs):


iOS 18 உடன், குறுஞ்செய்திகளுக்கான டேப்-பேக் குறிப்பிடத்தக்க அப்டேட்டை பெறுகிறது. இதன் மூலம், மற்ற மெசேஜிங் செயலிகளைப் போலவே, வண்ணங்களை கொண்ட எந்த எமோஜி அல்லது ஸ்டிக்கர் மூலமும் செய்திகளுக்குப் பயனர்கள் பதிலளிக்க முடியும். கூடுதலாக, இது செய்திகளை திட்டமிடுதல் மற்றும் உரையை வடிவமைக்கும் திறனைக் கொண்டுவருகிறது (underline, strikethrough, etc. ஆப்பிள் iOS 18 உடன் RCS ஆதரவையும் வெளியிட்டுள்ளது.