ஆப்பிள் வாட்சினை பயன்படுத்தும் பலருக்கு அதில் கூகுள் மேப்பினை எப்படி பயன்படுத்துவது என்பது தெரிவதில்லை. அதோடு சிலர் வாட்சில் கூகுள் மேப் வசதி இல்லை என நினைத்துக்கொண்டிருக்கின்றனர். உண்மையில் ஆப்பிள் வாட்சில் கூகுள் மேப் வசதி இருக்கிறது . ஆனால் மொபைலை ஒப்பிடும்போது அதில் சில மாற்றங்கள் இருக்கலாம். கீழ்கண்ட வழிமுறைகளை பயன்படுத்தி ஆப்பிள் வாட்சில் கூகுள் மேப்பை பயன்படுத்த கற்றுக்கொள்ளுங்கள்.
ஆப்பிள் வாட்சில் கூகுள் மேப்பை பயன்படுத்துவதற்கு முன்பு இதை தெரிந்துக்கொள்ளுங்கள்:
ஆப்பிள் வாட்சை பொறுத்தவரையில் நேரடியாக ஒரு புதிய இடத்தை உள்ளிட முடியாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். அதற்கு பதிலாக நீங்கள் உங்களது ஐபோனைத்தான் பயன்படுத்த வேண்டும்.அதில் உங்களது தற்போதையை இடத்தையும் , சென்று சேரவேண்டிய இடத்தின் லொக்கேஷனையும் பதிவிட்ட பிறகு வாட்சில் உள்ள வழிமுறைகளை நீங்கள் பயன்படுத்தாலம். மற்றொரு விஷயத்தை நினைவில் கொள்ளுங்கள் ஆப்பிள் வாட்சில் வரைபடம் கிடையாது . ஆனால் லொக்கேஷனுக்கான தூரம் எவ்வளவு இருக்கிறது. பயண நேரம் எவ்வளவு , திசைக்கான அம்புக்குறி இவற்றையெல்லாம் காண முடியும்.
இதையெல்லாம் உறுதி செய்துக்கொள்ளுங்கள் :
- உங்கள் ஆப்பிள் வாட்சானது WatchOS 5 அல்லது அதற்கு மேற்பட்ட இயங்குதள பதிப்புடன் இருக்க வேண்டும்.
- அதேபோல உங்கள் ஐபோனானது IOS10 அல்லது அதற்கு மேற்ப்பட்ட இயங்குதள பதிப்புடன் இருக்க வேண்டியது அவசியம்.
- அடுத்ததாக இரண்டு டிவைசிலும் ப்ளூடூத் வசதி ஆக்டிவாக இருக்க வேண்டும்.
- அதே போல ஆப்பிள் வாட் மற்றும் ஐபோனில் லொக்கேஷனை ஆன் செய்து வைத்துக்கொள்ளுங்கள். வாட்சின் லொக்கேஷனை மொபைல் மூலமாகவே ஆக்டிவ் செய்யலாம் . அதற்கு settings-->privacy---> locatiom --->services-->google maps என்னும் வசதியை பயன்படுத்தலாம். இதை செய்தால்தான் இந்த சேவையை நீங்கள் பயன்படுத்த முடியும்.
சிலர் தினமும் ஒரே லொகேஷனுக்கு சென்று வர வேண்டியிருக்கும் அவர்கள் சேமிக்கப்பட்ட இலக்கு வசதியை பயன்படுத்தலாம். அதற்கு உங்கள் ஆப்பிள் வாட்சில் , கூகுள் மேப் வசதியை திறக்க வேண்டும்.
- அதில் home அல்லது work என்னும் வசதியை க்ளிக் செய்ய வேண்டும்.
- அதன் பிறகு படிப்படியான வழிமுறைகளை உங்கள் வாட்சில் பெறலாம்
வேறு லொக்கேஷனை மாற்ற விரும்பினால் இந்த வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் :
- உங்கள் ஐபோனில் கூகுள் மேப்ஸை திறக்க வேண்டும் .
- அதில் நேவிக்கேஷனை தொடங்குங்கள்.
- அதன் பிறகு உங்கள் ஆப்பிள் வாட்சை எடுத்து அதில் கூகுள் மேப்பை திறந்துக்கொள்ளுங்கள்.
- அதில் current trip என்னும் வசதிக்கு கீழ் உள்ள ETA என்னும் வசதியை க்ளிக் செய்து மாற்றிக்கொள்ளலாம்.