சென்னை அருகே உள்ள ஸ்ரீபெரும்புதூரில் ஐபோன் 13- இன் புதிய மாடலுக்கான தயாரிப்பு பணி தொடங்கியுள்ளது.


உலக அளவில் ஆப்பிள் ஃபோன்களுக்கென தனி ரசிகர்கள் இருக்கிறார்கள். தரம், தனிநபரின் தகவல் பாதுகாப்பு, ஃசாப்ட்வேர் உள்ளிட்ட பல காரணங்களுக்கு ஆப்பிள் ஃபோன்கள் என்றால் எல்லாருக்கும் ஒரு க்ரேஸ் இருக்கிறது. இன்னும் சொல்லபோனால், ஆப்பிள் என்ற பிராண்ட் பெயருக்கே எலக்ட்ரானிக் சந்தையில் தனி இடம் இருக்கிறது. இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்மாட்ஃபோன்களுக்கு வரவேற்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில், ஆப்பிள் நிறுவனம், மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ், இந்தியாவிலேயே தனது ஃபோன்களை தயாரிக்க கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஒப்பந்தம் கையெடுத்திடப்பட்டது. அதன்படி, ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்ஃபோனான ஐஃபோன் 13-இன் உற்பத்தி ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஆலையில் தொடங்கியுள்ளது.




ஆப்பிள் நிறுவனத்துக்கு ஒப்பந்த முறையில் ஸ்மார்ட்ஃபோன்களை தயாரித்து தரும் ஃபாக்ஸ்கான் நிறுவனம் (Foxconn and Wistron,) தற்போது ஐஃபோன் 13ஐ உற்பத்தி செய்து தரத் தொடங்கியுள்ளது. மேலும்,  ஐஃபோனின் முன்னணி மாடல் ஸ்மார்ட் ஃபோன்கள் அனைத்தும் சென்னை ஆலையில் தயாரிக்கப்படும் என்று ஏற்கனவே ஆப்பிள் நிறுவனம் அறிவித்திருந்தது.


இது குறித்து, ஐபோன் இந்தியா நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் கூறுகையில், இந்தியாவில் உள்ள எங்களது வாடிக்கையாளர்களுக்காக, உள்ளூரிலேயே ஐபோன் 13 புதிய மாடல்களை தயாரிப்பதில் பெரும் மகிழ்ச்சியடைகிறோம்.” என்கிறார்.


சென்னை ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஆப்பிள் ஆலையில் தற்போது ஐபோன்11, ஐபோன் 12, ஐபோன் 13 உள்ளிட்ட ஸ்மாட்ஃபோன்கள் மட்டுமே தயாரிக்கப்பட உள்ளது. மீதமுள்ள, மாடல்கள், ஐபோன் ப்ரோ மாடலகள் ஆகியவற்றின் உற்பத்தி குறித்து நிறுவனம் இன்னும் எவ்வித தகவலையும் வெளியிடவில்லை. மேலும், உள்ளூரிலேயே தயாரிக்கப்படுவதால் இந்தியாவில் ஐபோன் விலை குறையாலாம் என்ற எதிர்பார்ப்பும் எழுந்தது. ஆனால், ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் ஐபோன்களை உற்பத்தி செய்வது, சந்தையில் ஐபோன்கள் எப்போதும் கிடைக்கும் வகையில் இருப்பதற்கே தவிர, விலையை குறைப்பது அந்நிறுவனத்தின் நோக்கம் அல்ல.


சென்னையில் ஃபாக்ஸ்கான், பெகாட்ரான், விஸ்ட்ரான் ஆகிய 3 ஒப்பந்த நிறுவனங்களில் ஆப்பிளின் ஐஃபோன்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. இந்திய செல்போன் சந்தையில் ஆப்பிளின் சந்தை பங்கும் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கத. மேலும், இந்திய மொபைல் சந்தையில், ஐபோனின் விற்பனை ஏழு மில்லியன் அளவுக்கு உயர்ந்து 108 சதவீதம் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண