உலகளவில் மிகவும் முக்கியமான ஒரு தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்று ஆப்பிள் நிறுவனம். இந்த நிறுவனத்தின் ஐபோன்கள் என்றால் உலகம் முழுவதும் அதிக மதிப்பு கொண்டுள்ளதாக அமைந்துள்ளது. ஒரு மொபைல் போன் தன்னுடைய அறிமுகம் முதல் தற்போது சந்தையின் தனக்கு என்று பெரிய மவுசு கொண்டதாக இருப்பது ஐபோனிற்கு மட்டும் தான் என்று கூறினால் அது மிகையாது. அப்படிப்பட்ட ஐபோனை அந்த நிறுவனத்தின் தலைவராக இருந்த ஸ்டீவ் ஜாப்ஸ் 15ஆண்டுகளுக்கு முன்பாக இதேநாளில் அறிமுகம் செய்தார்.
15 ஆண்டுகளுக்கு முன்பாக இதேநாளில் இது தொடர்பாக நடைபெற்ற அறிமுக கூட்டத்தில் உரையாற்றிய ஸ்டீவ் ஜாப்ஸ்,”ஆப்பிள் நிறுவனம் எப்போதும் இந்த நாளுக்கு காத்திருந்தது. ஆப்பிள் நிறுவனம் எப்போது ஒரு புதிய விஷயத்தை வெளியிட்டாலும் அது ஒரு புரட்சியை செய்யும் விதமாகவே அமைந்திருக்கிறது. உதாரணத்திற்கு 1984ஆம் ஆண்டு மெக்ன்டோஷ் ஓஎஸ் வெளியிடப்பட்டது. இது கணினி சந்தையில் பெரும் புரட்சியை ஏற்படுத்தியது. அதன்பின்னர் 2001ஆம் ஆண்டு ஆப்பிளின் ஐபேட் இசை பிரியர்களுக்கு இசையை கூடுதல் சிறப்பாக கொண்டு சேர்த்தது. அத்துடன் இசை பிரியர்கள் மத்தியில் பெரும் ஆதரவை பெற்றது.
அந்த வரிசையில் இன்று ஆப்பிள் நிறுவனம் மேலும் மூன்று புதிய கண்டுபிடிப்புகளை அறிமுகம் செய்ய உள்ளது. முதலில் வைட் ஸ்கிரீன் ஐபேட், இணையதள கட்டுப்பாட்டு கருவி மற்றொன்று ஐபோன். இந்த ஐபோன் மூலம் மொபைல் போன் சந்தையில் ஆப்பிள் நிறுவனம் கால்பதிக்க உள்ளது. தற்போது சந்தையில் உள்ள அனைத்து மொபைல் போன்களைவிட ஐபோன் மிகவும் உயர்ந்த நிலை ஸ்மார்ட் போனாக இருப்பது மட்டுமல்லாமல் பயன்படுத்தவும் எளிதானதாக அமையும்” எனக் கூறினார்.
முதல் முறையாக வெளியான ஐபோன் மாடல் 3.5 இன்ச் டிஸ்ப்ளே கொண்டிருந்தது. அதன்பின்னர் தற்போது ஐபோன்கள் டிஸ்ப்ளே மட்டும் தரம் மேலும் உயர்ந்துள்ளது. கடைசியாக ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் மொபைல் போன் வெளியாகியுள்ளது. அந்த மாடலில் மொபைலின் டிஸ்ப்ளே 6.7 இன்ச் என்று அமைந்துள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் மற்ற பொருட்களை போல் ஐபோனிற்கும் பல வாடிக்கையாளர்கள் தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கின்றனர். இந்தியாவில் ஐபோனின் வளர்ச்சி மிகவும் வேகமாக இருந்துள்ளது. இந்தியாவில் ஐபோனின் விலை அதிகம் என்றாலும் பெரும்பாலான மக்கள் தற்போதும் வாங்க விரும்பும் மொபைல் போன்களில் ஐபோனிற்கு எப்போதும் இடம் உண்டு. ஆகவே இந்தியாவில் ஐபோனின் மதிப்பு இப்போதும் அதிகமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: எதிர்பார்க்காத அளவு விலை குறைப்பு..! அடித்தது ஜாக்பாட்..!