இந்தியாவில் 5G சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி அக்டோபர் 1ஆம் தேதி தொடக்கி வைத்தார். முதற்கட்டமாக சென்னை உள்பட எட்டு முக்கிய நகரங்களில் 5ஜி சேவையை ஏர்டெல் நிறுவனம் வழங்கத் தொடங்கியது.
ஸ்மார்ட்ஃபோன் யூசர்கள் பலரும் ஏற்கெனவே 5ஜி போன்களைக் கொண்டுள்ள நிலையில், கிட்டத்தட்ட அனைத்து முக்கிய ஸ்மார்ட்போன் பிராண்டுகளும் தற்போது 5G மென்பொருளுக்கான அப்டேட்களை வழங்கி வருகின்றன. அந்த வகையில், இந்தியாவில் குறிப்பிட்ட ஐபோன் பயனர்களுக்கு அடுத்த வாரம் முதல் 5ஜி சேவை வழங்கப்பட உள்ளதாக ஆப்பிள் நிறுவனம் உறுதிப்படுத்தியது.
முதலில் iOS 16 பீட்டா மென்பொருள் திட்டத்தின் மூலம் Airtel மற்றும் Jio வாடிக்கையாளர்களுக்கு இந்த சேவை வழங்கப்படுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து டிசம்பரில் அனைத்து ஆப்பிள் பயனர்களுக்கும் 5ஜி சேவை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்பிள் இந்தியா கூறியபடி, iPhone 14, iPh.one 13, iPhone 12 மற்றும் iPhone SE (ஜெனரேஷன் 3) மாடல்களைப் பயன்படுத்துபவர்கள் விரைவில் 5G மென்பொருள் அப்டேட்டைப் பெறுவார்கள் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. உங்கள் ஃபோனில் 5ஜி சப்போர்ட் உள்ளதா? என்பதை எப்படி சரிபார்க்கலாம் என்பது குறித்து இங்கே தெரிந்துகொள்ளவும்:
ஸ்டெப் 1: உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள 'செட்டிங்ஸ்' என்ற ஆப்ஷனை தேர்வு செய்யவும்.
ஸ்டெப் 2: அதில் ‘சிம் கார்டு & மொபைல் டேட்டா’ ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
ஸ்டெப் 3: 'சிம்'மைத் தேர்ந்தெடுக்கவும்
ஸ்டெப் 4: சிம் தகவல் மற்றும் அமைப்புகள் மெனுவின் கீழ் 'பிரிஃபெர்ட் நெட்வொர்க் டைப்' என்பதைச் சரிபார்க்கவும்.
ஸ்டெப் 5: அந்த ஆப்ஷனின் கீழ் 4ஜி, 3ஜி, 2ஜி என்று லிஸ்ட் செய்யப்பட்டிருக்கும். அதில் 5ஜி என்பது பட்டியலிடப்பட்டிருந்தால், உங்கள் சாதனம் 5ஜி சாதனம் ஆகும்.
ஏர்டெல் ஆப் மூலமும் கண்டறியலாம்
ஏர்டெல் பயனர்கள் ஏர்டெல் ஆப்பை பயன்படுத்தியும் 5G மொபைலா என்பதை கண்டறியலாம். அப்டேட் செய்யப்பட்ட ஏர்டெல் தேங்க்ஸ் ஆப் வைத்திருந்தீர்களேயானால், அதில் 5ஜி என்ற பெயர் தானாகவே இணைந்திருக்கும். அப்படி இருந்தால் உங்கள் பகுதியில் 5ஜி வந்துவிட்டதா என்று கண்டறிய அதிலேயே ஒரு ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும். பயனர்கள் அறிவிப்புகளில் இருந்து ‘Airtel 5G Plus live in india' என்னும் ஆப்ஷன் இருக்கும். அதனை பயன்படுத்தி உங்கள் பகுதியில் 5G இருக்கிறதா? என்பதை சரிபார்க்கலாம். Apple Realme, Xiaomi, Oppo, Vivo, OnePlus மற்றும் Samsung உள்ளிட்ட பிராண்டுகளில் எந்த போன் 5G சப்போர்டுடன் வருகிறது என்னும் போன்களின் பட்டியலை Airtel தேங்க்ஸ் ஆப் வழங்குகிறது, அதில் சென்றும் கண்டறியலாம்.