பிரபல Apple நிறுவனம்  சமீபத்தில் iphone 13,  iphone 13 mini ,  iphone 13 pro,  iphone 13 max உள்ளிட்ட தனது படைப்புகளை அறிமுகப்படுத்தியது. இந்நிலையில் தனது இந்திய  பயனாளர்களை கவரும் வகையில் புதிய சலுகை ஒன்றை அறிவித்துள்ளது. அதன்படி iphone 12 மற்றும் iphone 12 mini  ஆகிய இரண்டு  பிராண்ட் மொபைல்போன்களில் எதை வாங்கினாலும் , அந்த வாடிக்கையாளருக்க் airpods இலவசமாக வழங்கப்படும் என அறிவித்துள்ளது. இது தவிர ஒயர்லஸ் சார்ஜரும்  கிடைக்கிறது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விழாக்கால சலுகையாக இதனை apple நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த ஆஃபர் வருகிற அக்டோபர் 7 ஆம் தேதி தொடங்கி அடுத்த மாதம் நவம்பர் 2 ஆம் தேதி வரையில்  அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் AirPods மற்றும் ஒயர்லஸ் சார்ஜரின் விலை 14,900 என்ற மதிப்பீட்டில் விற்பனை செய்யப்படுகிறது. அப்படி இருக்கும் பட்சத்தில்  அடு ஒரு சிறந்த ஆஃபராக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. 


 






 



ஐபோன் 12 ஆனது   ₹65,900  என்ற ஆரம்ப விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஐபோன் 13 அறிமுக
ப்படுத்தப்பட்ட பிறகே ஐபோன் 12  மொபைலின் விலை குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.ரூ. 64 ஜிபி சேமிப்பு மாடலுக்கு 65,900 ரூபாயாகவும்,  128 ஜிபி சேமிப்பு திறன் கொண்ட 70,900 மற்றும் ரூ. 256 ஜிபி சேமிப்பு திறன் கொண்ட ஐபோன் 12 ஆனது 80,900. ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.ஐபோன் 12 மினி விலையை பொருத்தவரையில்  64 ஜிபி சேமிப்பு திறன் கொண்ட மொபைலானது  59,900ரூயாக்கும் . 128 ஜிபி சேமிப்பு திறன் கொண்ட மாடலுக்கு 64,900 ரூபாயாகவும்  மற்றும் ரூ. 256 ஜிபி சேமிப்பு திறன் கொண்ட   ஐபோன் 12 மினியானது 74,900 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது தவிர பயனர்கள் தங்கள் பழைய ஐபோனுக்கு தள்ளுபடிக்கு வர்த்தகம் செய்யக்கூடிய வசதிகளையும் ஆப்பிள் நிறுவனம் வழங்கியுள்ளது. இது தவிர zero  EMI  வசதிகளையும் தனது பயனாளர்களுக்கு ஏற்படுத்திக்கொடுத்துள்ளது ஆப்பிள் நிறுவனம். 





விழாக்கால சலுகையாக அமேசான் மற்றும் ஃபிளிப்கார்ட் தளங்கள் அறிமுகப்படுத்தியுள்ள  great indian festival  மற்றும்  big billion day ஆகியவற்றிலும் ஐபோன் மொபைலுக்கான சில சலுகைகளை வழங்கி வருகிறது.great indian festival  விற்பனையானது அமேசான் பிரைம் பயனாளர்களுக்கு  இன்று ( அக்டோபர் 2)  ஆம் தேதியும் மற்ற பயனாளர்களுக்கு நாளை (அக்டோபர் 3) ஆம் தேதியும் தொடங்குகிறது.