பிரபல Apple  நிறுவனம் சமீபத்தில் டிஜிட்டல் அறிமுக நிகழ்ச்சி ஒன்றை நடத்தியது. “Unleashed” MacBook event என்ற அந்த நிகழ்ச்சியில்  தனது புதிய படைப்புகளை அறிமுகப்படுத்தியது.  குறிப்பாக அதன் அடுத்த தலைமுறை macbook pro  மற்றும் Airpods களை உலக சந்தையில் அறிமுகப்படுத்தியது. இந்நிலையில் மேக் புக் புரோ மற்றும் ஏர்பாட்ஸ் இந்தியாவில் நேற்று (அக்டோபர் 26 ) வெளியாகும் என அறிவித்திருந்தது ஆப்பிள்.ஆனால் விற்பனைக்கு வரவில்லை.


இதற்கான காரணம் என்ன என்பது குறித்து Apple நிர்வாகம் விளக்கம் எதையும் இன்னும் அறிவிக்கவில்லை. supply chain issues என்னும் விநியோக சங்கிலி பிரச்சனையை எதிர்கொண்டிருக்கலாம் என கருதப்படுகிறது. மேலும் சிப்செட் பற்றாக்குறை காரணமாக ஆப்பிள் தனது ஐபோன் 13 மற்றும் மேக் புக் உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்தி வைத்திருப்பதாக செய்திகள் வெளியானது. அதுவும் கூட  இந்தியாவில் விற்பனைக்கு வருவதில் தாமதத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என கருதப்படுகிறது.தாமதத்திற்கான காரணம் குறித்து ஆப்பிள் நிறுவனம் தனது இந்திய வலைத்தள பக்கங்களில் விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.





 நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட மூன்றாம் தலைமுறை இயர் பாட்களை ஆப்பிள் அறிமுக செய்தது Apple. முந்தைய தலைமுறை மாடலை ஒப்டுகையில் வடிவத்தில் சிறிது மாற்றம் கண்டுள்ளது.அனைவரின் காதுகளிலும் பொருந்தும்படியாக சிறிய வளைவினை கொண்டுள்ளது. மேலும் வாட்டர் ரெஸிஸ்டன்ஸ், நாய்ஸ் கேன்சலேசன் உள்ளிட்ட வசதிகளுடனும் களமிறங்கியுள்ளது.இதில் உள்ள சென்சார்கள் மேம்படுத்தப்பட்ட இசை அனுபவத்தை கொடுக்கும் என கூறப்படுகிறது. இதன் விலை இந்திய ரூபாய் மதிப்பில் புதிய ஏர்பாட்ஸ் 3 விலை ரூ. 18,500 ஆகும். இத்துடன் ஏர்பாட்ஸ் ப்ரோ, மற்றும் ஏர்பாட்ஸ் ப்ரோ மேக்ஸ் மாடல்களில் புதிதாக ஸ்பேஷியல் ஆடியோ அம்சம் சேர்க்கப்படுவதாக ஆப்பிள் அறிவித்து இருக்கிறது.




அதே போல இந்தியாவில் அறிமுகமாகவுள்ள  மற்றொரு படைப்பு மேக் புக் புரோ.கடந்த ஆண்டு  13-inch  மாடல்   MacBook  ஐ ஆப்பிள் அறிமுகப்படுத்தியிருந்தது. இம்முறை 14-inch MacBook மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. இது15.5mm தடிமன் மற்றும், 3.5 பவுண்ட் எடையும் கொண்டுள்ளது.  மேலும்Touch Bar வசதியும் இதில் கிடைகிறது.  மேக்புக் ப்ரோ மாடல்களை 14 இன்ச் மற்றும் 16 இன்ச் என இருவித அளவுகளில் அறிமுகம் செய்தது. இது இரண்டிலுமே   M1 Pro மற்றும் M1 max வசதிகள் கிடைக்கின்றன.புதிய மேக்புக் ப்ரோ மாடலில் 1080 பிக்சல் பேஸ்டைம் ஹெச்.டி. கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது இதன் மூலம் மேம்படுத்தப்பட்ட வீடியோ அழைப்பினை பயனாளர்கள் மேற்கொள்ளலாம்.புதிய மேக்புக் ப்ரோ அதிகபட்சம் 8 டிபி வரையிலான ஸ்டோரேஜ், அதிகபட்சம் 64 ஜிபி மெமரியுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.14-inch மேக் புக்கானது $1,999 டாலர் மதிப்பீட்டில் கிடைக்கிறது. ஒரு முறை சார்ஜ் செய்தால் இதன் பேட்டரி திறன் 15 மணிநேரம் வரை நீடிக்கும். 16 இன்ச் திரைக்கொண்ட மேக் புக்கானது  $2,499 என்ற ஆரம்ப விலையில் கிடைக்கிறது.