ஆப்பிள் நிறுவனத்தின் கலிபோர்னியா ஸ்டிரீமிங் நிகழ்வு துவங்கியது. ஆன்லைனில் நேரலை செய்யப்படும் ஆப்பிள் நிகழ்வில் அந்நிறுவனத்தின் ஆப்பிள் டிவி பிளஸ் குறித்த அறிவிப்பு வெளியானது. இந்த ஆண்டு ஆப்பிள் டிவி பிளஸ் சேவையில் வழங்கப்பட இருக்கும் நிகழ்ச்சிகள் குறித்த முன்னோட்டம் வெளியிடப்பட்டது.
இதைத் தொடர்ந்து புதிய ஐபேட் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டன. புதிய ஐபேட் மாடல் ஏ13 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது. இது அன்றாட பயன்பாடுகளுக்கு ஏற்ற அம்சங்களை முன்பைவிட அதிவேகமாக செயல்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. புதிய ஐபேட் மாடலில் 12 எம்பி அல்ட்ரா வைடு செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் இதில் செண்டர் ஸ்டேஜ் எனும் அம்சம் வழங்கப்பட்டு இருக்கிறது. இது வீடியோ கால் மேற்கொள்ளும் போது பல்வேறு வசதிகளை வழங்குகிறது.
இந்த ஐபேட் மூன்றாம் தரப்பு கீபோர்டுகள் மற்றும் இது முதல் தலைமுறை ஆப்பிள் பென்சில் சப்போர்ட் கொண்டிருக்கிறது. இதன் பேஸ் மாடலான 64 ஜிபி விலை 329 டாலர்கள் (சுமார் 24 ஆயிரம்) என துவங்குகிறது. இதே நிகழ்வில், புதிய ஐபேட் மாடல்களை வெளியிட்டுள்ளது. இதனை தொடர்ந்து ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 7 அறிமுகம் செய்ததுள்ளது . புதிய ஆப்பிள் வாட்ச் 7 நாள் முழுக்க பேட்டரி, பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது.
இத்துடன் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி, இ.சி.ஜி. வசதி கொண்டுள்ளது ஆகியவற்றை கொண்டுள்ளது. புதிய வாட்ச் 7 இதுவரை வெளியான வாட்ச் மாடல்களில் மிகவும் உறுதியான வடிவமைப்பை கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் ஆல்வேஸ் ஆன், டிஸ்ப்ளே, அதிக வாட்ச் பேஸ்கள், ஐந்து அலுமினியம் நிறங்களில் கிடைக்கிறது. புதிய ஆப்பிள் வாட்ச் 7 விலை 399 டாலர்கள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.மேலும் இரத்தத்தில் உள்ள சர்க்கரை மற்றும் இரத்த அழுத்தத்தை சரிபார்க்கும் சென்சாரையும் 7 சீரிஸில் இணைத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கடந்த சில வருடங்களில் Apple ஸ்மார்ட் வாட்ச்சில் இதய துடிப்பு, எலக்ட்ரோ காடியோகிராம், இரத்த- ஆக்ஸிஜன் அளவை கணக்கிட உதவும் சென்சார்களை Apple நிறுவனம் படிப்படியாக தனது ஸ்மார்ட்வாட்சில் இணைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஆப்பிள் வாட்ச் மாடலை தொடர்ந்து ஆப்பிள் பிட்னஸ் பிளஸ் சேவை அறிவிப்புகள் வெளியானது. இதில் பல்வேறு உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியம் சார்ந்த சேவைகள் இடம்பெற்றுள்ளன.
கலிபோர்னியாவில் நடந்து வரும் இந்நிகழச்சியை நீங்களும் காணலாம்...இதோ அதற்கான லிங்க்...
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X