உலகளவில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள ChapGPT Apple-ன் Siri மூலம் பயன்படுத்த கிடைக்கும் அப்டேட் வழங்கப்பட்டுள்ளது.
சாட் ஜிபிடி(ChatGPT)
ஏதையாவது தெரிந்துகொள்ள வேண்டும் என்ற விருப்பத்துடன் அதற்கான விடையை தேடி நாம் செல்லும் முதல் இடம் கூகுள். கூகுளில் கிடைக்காத பதில்களும் இல்லை, தகவல்களும் இல்லை என்ற நிலை உள்ளது. ஆனால், ஏ.ஐ. தொழில்நுட்பம் வருகைக்கு பிறகு தொழில்நுட்பத்தில் பெரிய மாற்றம். அப்படி OpenAI எனும் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டு அறிமுகமானது தான், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமான சாட்ஜிபிடி(ChatGPT).
பொதுவாக நாம் ஒரு விஷயம் குறித்து கூகுளில் தேடினால், அதுதொடர்பானது மட்டுமின்றி பல்வேறு விதமான தகவல்களை நமக்கு வழங்கும். அனால், இந்த சாட்ஜிபிடி சரியாக நாம் எதை தேடுகிறோமோ அது குறித்து, தானாக செயற்கை நுண்ணறிவு மூலமாக ஆராய்ந்து தேவையான மற்றும் துல்லியமான தகவல்களை மட்டும் கொடுக்கும். அதோடு, உதாரணத்திற்கு கட்டுரை, மின்னஞ்சல் மற்றும் கதை என எதை கேட்டாலும், எழுதி கொடுக்கும் திறனையும் சாட்ஜிபிடி கொண்டுள்ளது.
Apple ஐ.ஒ.எஸ். அப்டேட்:
iOS 18.2, iPadOS 18.2, and macOS Sequoia 15.2 ஆகிய சாஃப்வேர் அப்டேட்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதோடு, நுண்ணறிவு சிறப்பம்சங்களையும் Apple நிறுவனம் வெளியிட்டுள்ளது. க்ரியேட்டிவிட்டி மற்றும் உற்பத்தி திறனை மேம்படுத்தும் நோக்கில் Apple செயற்கை நுண்னறிவு வசதியை Siri உடன் இண்டக்ரேசன் செய்து அப்டேட் கொடுத்துள்ளது.
Siri அல்லது Apple-ன் ’Writing Tools’ உடன் ChatGPT-ஐ இணைத்தது மூலம் அலுவலகம் அல்லது தனிப்பட்ட பயன்பாட்டிற்காக தேவையாக தகவல்களை எழுதி தரும் அப்டேட் இது. உங்களுக்கு தேவையான விசயத்தை கமெண்ட் செய்துவிட்டால் தவறு இல்லாமல் எழுதிக் கொடுத்துவிடும். அதோடு, ஏ.ஐ. மூலம் தேவையான ஃபோட்டோவையும் பெறலாம்.
இமேஜ் ப்ளேக்ரவுண்ட் (Image Playground):
இமெஜ் ப்ளேக்ரவுண்ட் என்ற புதிய வசதி Apple-ல் அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் தேவையான புகைப்படங்களை அதை பற்றி விவரித்தால் கிடைத்துவிடும். கார்ட்டூன், ஸ்டைலிஸ் விசுவல்ஸ் என நாம் கொடுக்கும் விவரங்களுக்கு ஏற்ப புகைப்படங்கள் கிடைக்கும். இது தனியாகவும் ஆப் ஸ்டோரில் செயலியாக கொடுக்கப்பட்டுள்ளது. மெசேஜ் உள்ளிட்ட செயலில் எனேபிள் செய்யும் வசதியும் உண்டு.
ஜென்மோஜி (Genmoji):
இந்த ஜென்மோஜி வசதி பயனர்கள் இமோஜி போலவே இருக்கும் ஸ்டிக்கர்களை உருவாக்க்கும். மெசேஜ் செய்யும்போது இமோஜிகளை அதிகம் பயன்படுத்துபவர்களுக்கு ஏற்றவாறு ஸ்டிக்கர்கள் கிடைக்கும்.
ஐஃபோன் 'Notes’ செயலில் புதிதாக “Image Wand” என்ற ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் நீங்கள் உருவாக்கும் ஓவியங்கள், வரைபடங்களை மெருகேற்ற பயன்படுத்தலாம்.
ஐஃபோன் கேமரா மூலம் ’QR code’ ஸ்கேன் செய்வது, ஏர்டெக் லோசேசன் ஷேரிங், சுடோகோ பசில்ஸ் ஆகியவையும் புதிய அப்டேட்டில் கொடுக்கப்பட்டுள்ளது.