- வங்கக்கடலில் உருவாகிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியில் தமிழ்நாட்டில் தொடர்ந்து பல பகுதிகளில் மழை
- தமிழ்நாட்டில் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்களில் அரையாண்டுத் தேர்வுகள் ஒத்திவைப்பு – தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அறிவிப்பு
- சாத்தனூர் அணையில் இருந்து விநாடிக்கு 13 ஆயிரம் கன அடி நீர் திறப்பு
- தொடர்ந்து மழை காரணமாக தென்பெண்ணை ஆறு கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
- கார்த்திகை தீபத்திருவிழா நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், கொப்பரைத் தீபம் மலைக்கு இன்று ஏற்றப்படுகிறது
- கார்த்திகை தீபத்திருவிழா நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்
- தமிழ்நாட்டில் தொடர்ந்து மழை பெய்து வரும் சூழலில், கோடியக்கரையில் அதிகபட்சமாக 18 செ.மீட்டர் மழை பதிவாகியுள்ளது
- திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே காட்டாவூரில் கட்டுப்பாட்டை இழந்த அரசுப்பேருந்து கவிழ்ந்தது
- கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரி 22 அடியை நெருங்கி வருகிறது
- தொடர்ந்து மழை பெய்வதால் பூண்டி சத்தியமூர்த்தி ஏரி முழு கொள்ளளவை எட்டியது
- நாகையில் பெய்த கனமழையால் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 8ம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு
- தொடர்ந்து கனமழையால் சென்னையில் விமானங்கள் தரையிறங்குவதில் சிரமம் – 15 விமானங்கள் தாமதம்
- ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியில் தமிழக கடலோர பகுதிகளில் பலத்த சூறைக்காற்று
- இன்று 74வது பிறந்தநாள் கொண்டாடும் ரஜினிகாந்திற்கு தலைவர்கள், பிரபலங்கள் வாழ்த்து