கேமரா குவாலிட்டிக்கு பெயர்பெற்ற மாடல் என்றால் ஒன் ப்ளஸ். ஆண்ட்ராய்டில் ஒரு ஐபோன் என்று கூறும் அளவுக்கு சிறப்பம்சங்களும், கேமரா குவாலிட்டியும் உள்ள ஒரு போன். அதேபோல் மற்ற ஆண்ட்ராய்டு போன்களின் விலையை ஒப்பிடும் போது விலையும் சற்று அதிகம்தான். ஆனால் சிறப்பம்சங்களை விரும்புபவர்களின் தேர்வாக ஒன் ப்ளஸ் இருந்து வருகிறது. இந்த நிலையில் ஒன் ப்ளஸின் எதிர்பார்க்கப்பட்ட Nord 2 மாடல் இன்று இந்திய சந்தையில் அறிமுகமாகிறது. ஒன் ப்ளஸின் லேட்டஸ்ட் Nord மாடலான Nord2 அமேசான் ப்ரைம் விற்பனையை கணக்கில் கொண்டு இன்று முதல் விற்பனை என அறிவிக்கப்பட்டது. அதாவது அமேசான் ப்ரைம் விற்பனை இன்று தொடங்குகிறது. இந்த விற்பனையில்  Nord 2 இடம்பெற்றுள்ளது. அமேசான் இணையதளம் மட்டுமின்றி ஒன் ப்ளஸின் நிறுவன இணைப்பக்கத்திலும் இந்த போனை ஆர்டர் செய்யலாம்


இந்தியாவில் OnePlus Nord 2 மாடல் ரூ. 27,999 முதல் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த விலை 6ஜிபி ரேம், 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட பேசிக் மாடலாக உள்ளது. அமேசான் பிரைம் விற்பனையில் இந்த விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ரேம், ஸ்டோரேஜ் அதிகரிக்க அதிகரிக்க விலையும் அதிகரிக்கிறது. அதன்படி, 8ஜிபி ரேம், 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட மாடல் ரூ.29,999க்கு விற்பனையாகிறது.  12ஜிபி ரேம், 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஹையெண்ட் மாடல் ரூ.34,999க்கு விற்பனையாகிறது.




OnePlus Nord 2 இரு வண்ணங்களில் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கிரீன் உட்ஸ் வண்ணத்தில் ஒரு இந்த மாடலை ஒன் ப்ளஸ் அறிமுகம் செய்தது. ஆனால் இந்த குறிப்பிட்ட வண்ணம் விற்பனைக்கு வரவில்லை. 6ஜிபி+128ஜிபி மாடலானது ஆகஸ்ட் 30 வரை விற்பனையில் இருக்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்பிறகு அந்த குறிப்பிட்ட ஸ்டோரேஜ் கொண்ட மாடல் நிறுத்தப்பட வாய்ப்புள்ளது.


6.43 இன்ச் AMOLED டிஸ்பிளே கொடுக்கப்பட்டுளது. இதன் ரெசொலேஷன் 1080x2400 ஆகவுள்ளது. மீடியாடெக் டைமெனெசிட்டி 1200-AI ப்ராசெஸர் கொண்ட இந்த மாடல் ஆண்ட்ராய்டு 11ஐ கொண்டுள்ளது. அதாவது  ஆண்ட்ராய்டு 11ஐ கொண்ட ஆக்சிஜன் OS 11.3ல் இயங்குகிறது OnePlus Nord 2.தற்போதுள்ள ஆண்ட்ராய்டு போன்களுக்கு வரும் சி டைப் சார்ஜர் கொடுக்கப்பட்டுள்ளது. பேட்டரியை பொருத்தவரை  4500mAh ஆகவும், 65W அதிவேக சார்ஜரும் கொடுக்கப்பட்டுள்ளது. கேமராவை பொருத்தவரை 32-megapixel முன் பக்க செல்ஃபி கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. பின்பக்க கேமராவைப் பொருத்தவரை 50மெகாபிக்ஸல்+8 மெகாபிக்ஸல்+2 மெகாபிக்ஸல் கொண்ட கேமராக்கள் கொடுக்கப்பட்டுள்ளன.




ஒன் ப்ளஸ் வெப்சைட்டில்,  HDFC வங்கி பரிவர்த்தனையால் இந்த மாடலை வாங்கினால் உங்களுக்கு ரூ.1000 வரை தள்ளுபடி கிடைக்கும். இந்த தள்ளுபடியும் தற்காலிகமானது எனவும் ஒன் ப்ளஸ் குறிப்பிட்டுள்ளது