பொதுவாக பிறந்தநாள் என்றாலே கொண்டாட்டம் தான். ஒவ்வொரு இடங்களை பொருத்தும், மனங்களை பொருத்தும் இந்த கொண்டாட்டங்கள் மாறுபடும். காசு இருந்தாலும் இல்லாவிட்டாலும் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் மகிழ்ச்சி என்பது ஒன்று தான். எல்லோரும் பிறந்தநாளை கொண்டாடுவதில்லை. சிலர் மற்ற நாட்கள் போலவும் சலிப்பு தட்டவே சோகமா அவர்கள் பிறந்தநாளிலும் இருப்பார்கள். ஆனால் சிலர் தங்கள் பிறந்தநாளை விட தங்களுக்கு பிடித்தவர்களின் பிறந்தநாளையே வெகு விமர்சையாக கொண்டாடுவர்கள். செல்லப்பிராணி, பைக், கார், வீடு எல்லாத்துக்கும் பிறந்தநாள் கொண்டாடி கஷ்டத்தை துரத்தி,மனதை நிறைய வைப்பார்கள். அப்படி தான் மதுரையில் சமூக ஆர்வலர்கள் இணைந்து ஆலமரத்திற்கு 102 வது  பிறந்தநாளை கொண்டாடியுள்ளனர்.



மதுரை மீனாட்சிபுரம் கண்மாய்கரை பகுதியில் ஏழுக்கும் மேற்பட்ட ஆலமரங்கள் வளர்ந்திருந்த நிலையில் ஒவ்வொரு ஆலமரங்களும் முறையாக பராமரிக்கப்படாமல் இருந்தது. இதனால்,  ஆறு மரங்களும் காய்ந்துபோன நிலையில் மீதியுள்ள ஒரே ஒரு ஆலமரமானது நூற்றாண்டை கடந்து உயர்ந்து நிற்கிறது. இந்நிலையில் நூற்றாண்டு கடந்த ஆலமரத்தை பாதுகாக்க கோரி அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இணைந்து ஆண்டுதோறும் பிறந்தநாள் விழா கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் மீனாட்சிபுரம் பகுதியில் உள்ள ஆலமரத்தின் 102வது பிறந்தாளை முன்னிட்டு இன்று அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் நீர்நிலை இயக்கத்தை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கேக்வெட்டியும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.



இதனையடுத்து நாட்டு இன மரங்களை பாதுகாக்கும் வகையில் சிறுவர்களுக்கு ஆலமரக்கன்றுகளை வழங்கி அதனை கண்மாய்கரைகளில் நடவைத்தனர். மனிதர்களின் ஆயுளை நீட்டிக்க செய்யும் ஆக்சிஜனை வழங்கும் ஆலமரத்திற்கு மனிதர்களை போன்று பிறந்தநாள் கொண்டாடிய மதுரை மக்களின் மனங்களுக்கு பாராட்டுதல்கள் குவிந்துவருகிறது. மரங்களின் தேவை குறித்து வருங்கால சந்ததியினருக்கு உணர்த்தும் வகையிலும், நாட்டு இன மரங்களை பாதுகாக்க வலியுறுத்தியும் இது போன்ற பிறந்தநாள் கொண்டாடியதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.



நேற்றைய மதுரை கொரோனா அப்டேட் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும் -TN Corona Update: மதுரையில் 22 பேருக்கு கொரோனா பாதிப்பு; புதுக்கோட்டையில் 35 !

மேலும் இது குறித்து சமூக ஆர்வலர்கள்......,” மரங்கள் நடும் அவசியம் குறித்து சமூகத்தில் பரவலான விழிப்புணர்வு உள்ளது. அதிலும் நாட்டு மரங்களை அதிகளவு தேடி நடும் போது சுற்றுச்சூழல் கூடுதலாக பாதுகாக்கப்படும். அரிய வகை பறவைகள் கூட சுற்றுச்சூழல் ஆரோக்கியமாக இருக்கும் இடத்தில் தான் வசிக்கின்றன. எனவே இயற்கையை மேம்படுத்த ஒவ்வொரு நபர்களுக்கும் பங்கு உண்டு. அதனை அனைவரும் சரியான முறையில் செய்யவேண்டும். மதுரையில் உள்ள 102 வயது ஆலமரத்திற்கு பிறந்தநாள் கொண்டாடியது மகிழ்ச்சியான தரும். இயற்கையின் பேர் அதிசியத்தை பற்றி விவாதிக்க எங்களுக்கு பெரும் வாய்ப்பாக அமைந்தது” என்றனர்.

 

 

மேலும் மதுரை தொடர்பான செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - மதுரை : கக்கன் முயற்சியால் கட்டப்பட்ட அணை உயிர்பெறுமா ?