அமேசான் மளிகை சேல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், தேயிலை, சர்க்கரை, கடலைமாவு இன்னும் நிறைய பொருட்களை எல்லாம் ரூ.1க்கு, ஆச்சரியப்படவைக்கும் தள்ளுபடி ஆஃபரில் விற்கப்படுகிறது.
அமேசான் ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனம், மளிகைப் பொருட்களை ஆச்சரியப்பட வைக்கும் தள்ளுபடி விலையில் அறிவித்துள்ளது. அமேசான் பேன்ட்ரியில் இருந்து வாங்குவதற்கு நிறைய பொருட்கள் உள்ளன. மளிகைப் பொருட்கள் ஆர்டரின் மீது ரூ.200 கேஷ்பேக்கும், 10 சதவீதம் இன்ஸ்டன்ட் தள்ளுபடிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும், குறிப்பிட்ட சில வங்கிகளின் கிரெடிட் கார்டு பயன்படுத்தி வாங்கப்படும் பொருட்களுக்கு 10% தள்ளுபடியும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அமேசான் பேன்ட்ரியில் 20 வகையான மளிகைப் பொருட்கள் உள்ளன. 1 கிலோ அளவிலான உருளைக்கிழங்கு, அவல், ஐஸ்க்ரீம், வெங்காயம், எலுமிசை, நாய்களுக்கான உணவு, கடலைமாவு, டாபர் க்ரீன் தேயிலை ஆகியன ரூ.1க்கு கிடைக்கும்.
நீங்கள் ரூ.1500க்கு மேல் ஆர்டர் செய்தால் ஃப்ளாட் ரூ.200 தள்ளுபடி கிடைக்கும். இந்த கேஷ்பேக் அனைத்து வகை ஆர்டர்களுக்கும் பொருந்தும்.
உடனடி 10% தள்ளுபடி:
சிட்டி பேங்க் அல்லது ஆக்சிஸ் வங்கியின் கிரெடிட் அல்லது டெபிட் கார்டு பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் மளிகை ஷாப்பிங்கிற்கு உடனடியாக 10% தள்ளுபடி அளிக்கப்படும். இந்த ஆஃபர்கள் அனைத்துமே அக்டோபர் 17 வரை தான்.
எம்ஆர்பியில் 50% தள்ளுபடி:
அமேசான் பேன்ட்ரி மளிகைப் பொருட்கள் மீது எம்ஆர்பியில் 50% தள்ளுபடி அறிவித்துள்ளது. டாடாவின் பருப்பு வகைகள், இந்தியா கேட் அரிசி, ரீஃபைன்ட் எண்ணெய், மதர் டெய்ரி பட்டர், டாய்லர் க்ளீனர், ஷேம்பூ, ட்ரை ஃப்ரூட்ஸ், சாக்கலேட் ஸ்லாட்ஸ் ஆகியன 50% ஆஃபரில் கிடைக்கின்றன.
அமேசான் தளத்தில் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் 2021 எனும் மாபெரும் சலுகை தின விற்பனை ஆரம்பமாகி உள்ளது. இந்த விற்பனையானது அக்டோபர் 3 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த சலுகை விற்பனையில் பல்வேறு பொருட்களுக்கும் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் ஷாப்பிங் என்றாலே ஆடைகள், கேட்ஜெட்ஸ், அலங்காரப் பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் என்று மட்டுமே இல்லாமல் மளிகைப் பொருட்களையும் தனது வீச்சுக்குள் கொண்டு வந்துள்ளது அமேசான்.
இந்த சீசனில் அமேசான் ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனம், மளிகைப் பொருட்களை ஆச்சரியப்பட வைக்கும் தள்ளுபடி விலையில் அறிவித்துள்ளது. இந்த ஆஃபர்களைப் பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் பயனடையலாம்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்