ஆன்லைன் தளங்கள் போட்டிப்போட்டுக் கொண்டு தயாரிப்புகளை வெளியிட்டு விற்பனை செய்து வருகின்றன. இதில் குறிப்பிடத்தகுந்த இடத்தில் இருப்பது பிளிப்கார்ட், அமேசான், ரிலையன்ஸ் டிஜிட்டல் ஆகியவை ஆகும். ஒவ்வொரு தளங்களும் தங்களது பயனர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்குகிறது. ஒவ்வொரு பண்டிகை தினத்துக்கும் அறிவிக்கப்படும் சலுகைகளோடு கூடுதலாக அவ்வப்போடு தள்ளுபடி தினங்கள் அறிவிக்கப்படுகிறது. அதன்படி தற்போது அமேசான் நிறுவனம் அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையை அறிவித்துள்ளது. அறிவிப்பின்படி, அக்டோபர் 4 முதல் சேல் தொடங்குவதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.  Amazon Great Indian Festival Sale LIVE Now!
https://amzn.to/3Fe1W0u


ப்ரைம் உறுப்பினர்கள் வழக்கம்போல விற்பனைக்கு ஒரு நாள் முன்பே இந்த ஸ்பெஷல் ஆஃபர்களை பெறுவார்கள். இந்த ஆண்டு தீபாவளிக்கு முந்தைய விற்பனையில் 75,000-க்கும் மேற்பட்ட உள்ளூர் கடைகள் பங்கேற்கும் என்று அமேசான் கூறுகிறது. கேஜெட்டுகள் மற்றும் பிற பொருட்களுக்கு அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையில் கவர்ச்சிகரமான தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட பொருட்கள், எலெக்ட்ரானிக்ஸ் பாகங்கள், ஸ்மார்ட்போன்கள், டிவிகள் மற்றும் வீட்டு உபயோக பொருட்களுக்கு சலுகைகள் கிடைக்கின்றன.



“இந்த ஆண்டு தி கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல், உள்ளூர் கடைகள் மற்றும் சிறிய மற்றும் நடுத்தர விற்பனையாளர்களிற்கு ஆதரவாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தொற்றுநோய் காரணமாக சிறுதொழில் செய்பவர்கள் எதிர்கொண்ட மோசமான சூழ்நிலையை கருத்தில் கொண்டு, வியாபாரிகளின் வளர்ச்சிக்கு பங்களித்து அவர்களுக்கு வாய்ப்பை வழங்குவதில் மகிழ்ச்சியடைகிறோம்” என்று அமேசான் இந்தியாவின் துணைத் தலைவர் மணீஷ் திவாரி ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.


பயனர்கள் தங்களுக்கு விருப்பமான மொழிகளில் ஷாப்பிங் செய்ய அமேசான் சமீபத்தில் பெங்காலி மற்றும் மராத்தி மொழியைச் சேர்த்தது. மேலும், ஆங்கிலம், ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகள் ஏற்கனவே உண்டு. தனது அலெக்சா வாய்ஸ் அசிஸ்டன்ட் மூலமாக ஷாப்பிங் செய்ய இந்தி மொழியையும் சேர்த்துள்ளது. அமேசான் இன்னும் ஒப்பந்தங்கள் மற்றும் சலுகைகளை அறிவிக்கவில்லை என்றாலும், HDFC வங்கி கிரெடிட் & டெபிட் கார்டுகள் மற்றும் EMI பரிவர்த்தனைகளுக்கு 10 சதவிகித உடனடி தள்ளுபடி, டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளில் நோ காஸ்ட் EMI இருக்கும் என்று கூறப்படுகிறது.



அமேசானின் சொந்த தயாரிப்புகளான எக்கோ, ஃபயர் டிவி ஸ்டிக் மற்றும் கின்டில் சாதனங்கள் விற்பனையிலும் தள்ளுபடிகள் காணலாம். சாம்சங், ஒன்பிளஸ், சியோமி, சோனி, போட், லெனோவா, ஹெச்பி, ஏசஸ், ஃபாசில் போன்ற பிராண்டுகளிலிருந்து 1000-க்கும் மேற்பட்ட புதிய தயாரிப்புகள் இருக்கும் என்று நிறுவனம் கூறுகிறது. இதற்கிடையில், அமேசான் பே ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டு உள்ள வாடிக்கையாளர்கள், விற்பனையின் போது சேரும் போனஸாக ரூ.750 உடன் 5 சதவீத ரிவார்டு புள்ளிகளைப் பெறுவார்கள். ஃபிளிப்கார்ட்டின் பிக் பில்லியன் நாட்கள் விற்பனை, அக்டோபர் 7-ம் தேதி தொடங்கி ஒரு வாரம் தொடரும் என்பது குறிப்பிடத்தக்கது.