ஒவ்வொரு பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களை குறிவைத்து ஆன்லைன் இ-வர்த்தக தளங்கள் சலுகைகளை அறிவிப்பது வழக்கம். அந்தவகையில் ஆண்டு தோறும் அமேசான் தளம் சுதந்திர தினத்தை குறிவைத்து ஒரு சிறப்பு சலுகையை அறிவிக்கும். அதேமாதிரியான சலுகையை அமேசான் நிறுவனம் இந்தாண்டும் அறிவித்துள்ளது. வரப்போகும் சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்த அதிரடி Amazon Great Freedom Festival Sale வரவுள்ளது. ஆகஸ்ட் 6-10 வரை இந்த சலுகை உண்டு.


 சமீபத்தில்தான் அமேசான், ப்ரைம் வாடிக்கையாளர்களுக்கு சலுகையை அறிவித்திருந்தது.





இந்நிலையில் வரப்போகும் ஆஃபர் அனைத்துவிதமான பயனர்களுக்கும் பொருந்தும். மொபைல் போன்கள், மடிக்கணினிகள், டிவிகள், ஆடியோ மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் பல வகைகளில் பிரபலமான தயாரிப்புகளில் ஆஃபர்கள் கொடுக்கப்படும் என அமேசான் தெரிவித்துள்ளது. பல புதிய தயாரிப்புகளும் அமேசான் சேலில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் SBI கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்களுக்கும் ஒரு சிறப்பு கேஷ்பேக் சலுகையும் கொடுக்கப்படவுள்ளது.


AMAZON GREAT FREEDOM FESTIVAL விற்பனை 2022 எப்போது தொடங்கும்?


Amazon Great Freedom Festival விற்பனை 2022 ஆகஸ்ட் 6-10 வரை நடைபெறவுள்ளது. 


ப்ரைம் வாடிக்கையாளர்கள் என்றால் ஆகஸ்ட் 5ம் தேதியே Amazon Great Freedom Festival தொடங்கும்.




வங்கிச் சலுகைகள் என்னென்ன? 


SBI கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்களுக்கு 10% தள்ளுபடி


EMI பரிவர்த்தனைகளில் ரூ.1,500 வரை தள்ளுபடி


ரூ.30,000க்கு மேல் மதிப்புள்ள பொருட்கள் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் மீது கூடுதல் ரூ.500 தள்ளுபடி


செல்போன்கள், லேப்டாப்களுக்கு அதிக தள்ளுபடி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. , OnePlus Nord CE 2 Lite 5G , Redmi Note 11 , Xiaomi 11 Lite NE 5G , iQOO Neo 6 , Samsung Galaxy M33 , Samsung Galaxy A73 போன்ற பிரபலமான போன்களில் தள்ளுபடி கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.


வீட்டு உபயோகப் பொருட்களை வாங்க விரும்பினால் டிவி,வாஷிங் மெஷின், ஃபிரிட்ச், ஏசி, மைக்ரோவேவ் போன்ற பொருட்களுக்கும் நல்ல தள்ளுபடி கிடைக்கும் என எதிர்பார்க்கலாம்.