Kollywod heros : போட்டிப்போட்டு கோடிகளில் சம்பளம் வாங்கும் தமிழ் ஹீரோக்கள் - பட்டியல் பார்க்கலாம் வாங்க
தமிழ் சினிமா இன்று அபாரமான வளச்சியை எட்டியுள்ளது என்பதை யாராலும் மறுக்கவே முடியாது. இந்திய அளவில் தமிழ் சினிமாவிற்கு நல்ல வரவேற்பும் எதிர்பார்ப்பும் இருந்து வருவதால் வசூலிலும் சாதனை படைத்தது வருகிறது. இந்திய மக்களிடையே பெரும் எதிர்பார்ப்போடு வெளியவந்து இன்று கோடிகளில் வசூலை வரி குவித்த திரைப்படம் "விக்ரம்". லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான வீரம் திரைப்படம் சுமார் ரூ. 450 கோடி வசூலை ஈட்டியுள்ளது. பான் இந்திய திரைப்படங்களாக இன்றைய திரைப்படங்கள் வெளியாவதால் மற்ற மொழி திரைப்படங்களுக்கு மத்தியில் நமது கோலிவுட் திரைப்படம் இத்தனை அதிக வசூலை குவித்தது ஒட்டுமொத்த திரையுலகத்தையே மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
நம் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் கோடிகளில் தான் சம்பளம் பெறுகிறார்கள். ஒரு படத்தில் நடிப்பதற்கு அவர்கள் பெறும் சம்பளம் எவ்வளவு என்பது தெரிந்தால் நீங்கள் மலைத்தே போய்விடுவீர்கள்.
அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளார் உலக நாயகன். விக்ரம் திரைப்படத்தின் அமோக வெற்றியை அடுத்து அவரின் ஒரு படத்திற்கான சம்பளம் ரூ. 130 கோடியை எட்டியுள்ளது.
அடுத்த இடத்தில இருக்கிறார் தளபதி விஜய். இந்த ஹீரோ தற்போது இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடித்து வரும் வாரிசு திரைப்படத்திற்காக பெற்ற சம்பளம் ரூ. 120 கோடியாம். படத்தின் ஷூட்டிங் விசாகப்பட்டினத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் அவரின் வாரிசு ஷூட்டிங் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றது.
இப்படத்திற்காக இளைய தளபதி விஜய் ரசிகர்கள் பெரிய எதிர்பார்ப்புடன் காத்து கொண்டு இருக்கிறார்கள். அடுத்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் - விஜய் மறுபடியும் ஜோடி சேரும் விஜய்யின் 67 வது படத்திற்கு அவர் பெற இருக்கும் சம்பளம் ரூ. 130 கோடி. ஆனால் இப்படம் பற்றின அதிகாரபூர்வமான அறிவிப்பு இது வரையில் வெளியாகவில்லை.
அடுத்து வராரு நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். "வயசானாலும் உங்க அழகும் ஸ்டைலும் மாறவே இல்ல" இந்த வசனத்திற்கு ஏற்ற படி இன்றும் முன்னணி நடிகர்களுக்கு ஒரு போட்டியாக முன்னுதாரணமாக நடிப்பில் சிறிதும் தளர்ச்சி இன்றி சக்கைபோடு போடுகிறார். நம்ம தலைவர் சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் சமீபத்தில் வெளியான அண்ணாத்த திரைப்படத்திற்காக ரூ. 118 கோடி சம்பளம் பெற்றாராம். இருப்பினும் அப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றியையும், வசூலையும் பெறாததால் சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் அடுத்து ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் ஜெயிலர் திரைப்படத்திற்கு தனது சம்பளத்தை ரூ. 80 கோடியாக குறைத்து கொண்டார் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.