அமேஸ்பிட் பிப் யு ப்ரோ என்ற மாடலில் வெளியாகும் இந்த ஸ்மார்ட் வாட்ச்சில்,  1.43 அங்குல முழு வண்ண டிஎஃப்டி டிஸ்ப்ளே, 2.5டி கார்னிங் கொரில்லா கிளாஸ், ஆன்டி-ஃபிங்கர் பிரிண்ட் கோட்டிங் உள்ளிட்ட வசதிகள் உள்ளன. கறுப்பு, பிங்க் மற்றும் பச்சை நிறங்களில்  கிடைக்கும் இந்த ஸ்மார்ட் வாட்ச்சில், 50-க்கும் அதிகமான வாட்ச் பேஸ்களை தேர்வு செய்யும் வசதி உள்ளன.


60க்கும் மேற்பட்ட ஸ்போர்ட்ஸ் மோட்களை இந்த ஸ்மார்ட் வாட்ச் கொண்டுள்ளது. இதில், சைக்கிளிங், யோகா, டான்சிங், ஸ்கேட்டிங் மற்றும் கிக் பாக்ஸிங்  ஆகியவை அடங்கும். பிப் யு புரோ ஸ்மார்ட்வாட்ச் பயோ - ட்ராக்கர்  2 பிபிஜி மற்றும் ஆக்ஸிஜன் பீட்ஸ் சோம்னஸ்கேர் சென்சார்களுடன் வருகிறது. இது பயனர்களின் இதயத் துடிப்பை 24 மணி நேரமும் கண்காணிக்கிறது. மேலும் இதில், அலெக்சா மற்றும் ஜிபிஎஸ் உள்ளது. இதன்மூலம், உரையாடி மியூசிக், அலாரம் போன்ற அம்சங்களை இயக்க முடியும். செயலியுடன் இணைத்து கொண்டு உடல்நலன் சார்ந்த விவரங்களை தெரிந்துக் கொள்ளலாம். 


5 ஆயிரம் ரூபாய் பட்ஜெட்டில் கிடைக்கும் இந்த ஸ்மார்ட் வாட்ச், அமேசான் தளத்தில் விற்பனைக்கு வரும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.