பிரபல இந்தித் திரைப்பட நடிகர் ஷாருக்கான், ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்களுடன் மெய்நிகரில் கலந்துரையாடினர். ஷாருக்கானின்  மீர்ஃபவுண்டேஷன் இந்த மெய்நிகர் சந்திப்பை ஏற்பாடு செய்தது.


இந்த சந்திப்பின் போது ஷாருக்கான் தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார். கொரோனா காலத்தின் போது மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் அறிவுறித்தினார். மற்றவர்களின் அறிவுரைகளையும் கேட்டறிந்தார். உரையாடலின் போது தனது குழந்தைக்கு ஒரு நல்ல பெயரைத் தேர்வுசெய்ய உதவுமாறு ஷாருக்கானுக்கு பெண் ஒருவர் வேண்டுகோள் விடுத்தார். கட்டாயம் உதவுகிறேன் என்று அவரும் உறுதியளித்தார்.




உடனே மற்றொரு பெண், " இனி அனைவரும் பெயர் வைக்க வேண்டும் என்று வரிசையில் நிற்பார்கள்"என்று கிண்டல் அடித்தார். இதற்கு  நகைச்சுவையாக பதிலளித்த ஷாருக், “எனக்கு தற்போது வேலை இல்லை. குறைந்தபட்சம் இந்த  வேலையாவது கிடைக்கும் ” என்று கூறினார்.


2018ல் ஷாருக்கான் நடிப்பில் வெளிவந்த 'ஜீரோ'   திரைப்படம் மிகப் பெரிய பின்னடைவை சந்தித்தது.  இத்திரைப்படம் தனது திரை வாழ்க்கையில் நடந்த பேரிழப்பு என்று ஷாருக்கான் வெளிப்படையாகவே ஊடகங்களிடம் தெரிவித்தார். ஷாருக்கானின் 'பதான்' இந்தி படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது.