ஏர்டெல்லில் ரூ. 349 க்கு ரீசார்ஜ் செய்தால் இனி மேல் 2 ஜிபிக்கு பதில் 2.5 ஜிபியினை பெறக்கூடிய புதிய திட்டத்தினை இந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது பயனர்களுக்கு மகிழ்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா ஊரடங்கு காலத்தில் பெரும்பாலான நிறுவனங்கள் தங்களது பணியாளர்களை வீட்டில் இருந்தே பணிபுரிய அனுமதித்துள்ளனர். இந்த நேரத்தில் எந்த நெட்வொர்க்கில் அதிக டேட்டா கிடைக்கிறது என தேட ஆரம்பித்து அதனைப்பயன்படுத்தியும் வருகின்றனர். குறிப்பாக மக்களுக்கு பலனளிக்கும் வகையில் ஒவ்வொரு நெட்வொர்க்கும் சிறப்பு திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. இந்நிலையில் தான், ரிலையன்ஸ் நிறுவனம் இம்மாதத்தில் 5 புதிய ப்ரீயெப்டு திட்டங்களை no daily date limit என்பதன் அடிப்படையில் வழங்கியது. இதனையடுத்து ஏர்டெல் நிறுவனமும் ஜியோவின் ரூ.447 திட்டத்தினைப்போன்று 60 நாட்களுக்கு செல்லுபடியாகும் வகையில் ரூ.456 ப்ரீபெய்டு திட்டத்தினை அறிவித்துள்ளது. மேலும் தற்பொழுது ஏர்டெல்லில் ரூ. 349 மற்றும் ரூ.299 பயனர்களுக்கு சில பயனுள்ள திட்டங்களை அறிவித்துள்ளது.
ஏர்டெல் ரூ. 349 ப்ரீபெய்டு ப்ளாண் :
ஏர்டெல்லில்ல முன்னதாக ரூ. 349 ப்ரீபெய்ட் திட்டத்தில் 28 நாட்கள் வேலிலிட்டியுடன் தினமும் 2 GB டேட்டாக்கள் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது 2.5 GB என இணைய வசதி உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் அன்லிமிடெட் கால் வசதியுடன், தினசரி 100 எஸ்எம்எஸ்கள் வழங்கப்படுகிறது. மேலும் அமேசான் பிரைமினை இலவசமாக subscribe செய்து 28 நாட்கள் வேலிலிட்டியுடன் பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த திட்டத்தில் கூடுதலாக Airtel XStream premium, free hello tunes, Wynk Music, free online courses மற்றும் ரூ .100 கேஷ்பேக் ஆகியவை கூடுதல் நன்மைகள் இடம்பெற்றுள்ளன.
ஏர்டெல் ரூ. 299 ப்ரீபெய்டு ப்ளாண்:
ஏர்டெல் ரூ. 299 ப்ரீபெய்டு ப்ளாண் 30 நாட்கள் வேலிடிட்டியினைக்கொண்டுள்ளது. இதில் 30 நாட்களுக்கு 30 GB டேட்டா, அன்லிமிடெட் கால் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்கள் இலவச வழங்கவுள்ளது. மேலும் இதில் Prime Video Mobile Edition, Airtel XStream Premium, Free hellotunes, Wynk Music, Apollo 24 | 7 circle, Rs 100 cashback on Fastag, and free online courses ஆகியவை கூடுதல் நன்மைகளாக இடம் பெற்றுள்ளது. மேலும் ஏர்டெல் தனது வலைத்தளத்தில் புதிய நன்மைகளுடன் புதுப்பித்துள்ளது.
ஏர்டெல் ரூ. 456 ப்ரீபெய்டு ப்ளாண் :
ஏர்டெல் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள ரூ.456 ப்ரீபெய்டு திட்டம் என்பது 60 நாட்கள் செல்லுபடியாகும் வகையில் 50 ஜிபி டேட்டா நன்மைகளை தினசரி வரம்பில்லாமல் வழங்குகிறது. மேலும் இத்திட்டத்தில் வரம்பற்ற அழைப்புகள், தினசரி 100 எஸ்எம்எஸ், ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிரீமியம், இலவச ஹோலோட்டூன்ஸ் உள்ளிட்ட இலவச நன்மைகளை இதில் பெறமுடியும்.
இந்த திட்டங்கள் ஆன்லைன் வழியாக பயிலும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் வீட்டில் இருந்து பணிபுரியும் ஊழியர்களுக்கு பயனுள்ளதாக அமையும் என்ற வகையில் அமையக்கூடும் என ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது.