ஏர்டெல்
ஏர்டெல் நிறுவனம் சமீபத்தில் வீடுகளில் பயன்படுத்துவதற்கான அன்லிமிட்டெட் பிராண்ட்பேண்ட் இண்டெர்நெட் பிளான்கள், ஓடிடி சப்ஸ்கிரிப்ஷன்கள், டிவி சேனல்கள், ஏர்டெல் பிளாக் முக்கியத்துவம் கொண்ட கேர் முதலான அனைத்து வசதிகளும் கிடைக்கும் விதமான திட்டங்களை அறிவித்துள்ளது. 699 ரூபாய் தொடக்க விலை நிர்ணயிக்கப்பட்டிருக்கும் இந்தத் திட்டங்கள் 1599 ரூபாய் வரை கிடைக்கின்றன.
சூப்பர் ப்ளான்..
தொடக்க விலையான 699 ரூபாய் பிளான் மூலம் 40 Mbps அன்லிமிட்டெட் இண்டெர்நெட் வசதி, டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சப்ஸ்கிரிப்ஷன் ஆகியவை கிடைக்கின்றன. இவற்றோடு Airtel Xstream Premium மூலமாக சுமார் 14 ஓடிடி தளங்களில் பார்வையிட முடியும். SonyLIV, ErosNow, Lionsgate Play, Hoichoi, ManoramaMax, Shemaroo, Ultra, HungamaPlay, EPICon, DivoTV, Klikk, Nammaflix, Dollywood, Shorts TV ஆகிய ஓடிடி தளங்களை இதன்மூலம் பயன்படுத்தலாம். மேலும், Airtel 4K Xstream Box மூலமாக சுமார் 350 தொலைக்காட்சி சேனல்களையும் கண்டுகளிக்கலாம்.
மற்றொரு பேக்கேஜான 1099 பிளான் மூலமாக 200 Mbps வேகம் கொண்ட அன்லிமிட்டெட் இண்டர்நெட் வசதி, அமேசான் ப்ரைம், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஆகிய தளங்களின் சப்ஸ்கிரிப்ஷன் முதலானவை கிடைக்கின்றன. இவற்றோடு மேலே குறிப்பிடப்பட்டுள்ள 14 ஓடிடி தளங்களைப் பயன்படுத்தும் Airtel Xstream Premium வசதி, சுமார் 350 தொலைக்காட்சி சேனல்களைக் காண உதவும் Airtel 4K Xstream Box ஆகியவையும் இந்தப் பேக்கெஜில் கிடைக்கின்றன.
இதே வரிசையில் வரும் மற்றொரு பேக்கேஜான 1599 பிளான் மூலமாக ரீசார்ஜ் செய்வோருக்கு 300 Mbps வேகம் கொண்ட அன்லிமிட்டெட் இண்டர்நெட் வசதி, நெட்ஃப்ளிக்ஸ், அமேசார் ப்ரைம், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஆகிய தளங்களின் சப்ஸ்கிரிப்ஷன் முதலானவை கிடைக்கின்றன. முந்தைய இரண்டு பிளான்களைப் போலவே, இந்தப் பிளான் வாங்குவோருக்கும் 14 ஓடிடி தளங்களின் ஆக்சஸ் கொண்ட Airtel Xstream Premium வசதி, 350 தொலைக்காட்சி சேனல்களைக் காண உதவும் Airtel 4K Xstream Box ஆகியவையும் வழங்கப்படுகின்றன.
மேலும், ஏர்டெல் இணையச் சேவையை வாங்கும் போது, முதல் கட்டமாக Airtel 4K Hybrid TV Box கட்டணமாக 2 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும். மேலும் ஒவ்வொரு மாதமும் இணையத்தில் 3333GB வரை பயன்படுத்திக் கொள்ள FUP வழங்கப்பட்டுள்ளது.