5G Network: 5 ஜி சேவைகளுக்கு 5 முதல் 10 சதவீதம் கட்டணம் வசூலிக்க ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனம் முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
மொபைல் போன்கள் இன்றைய காலகட்டத்தில் நமது உயிர்நாடியாக மாறிவிட்டன. ஏனெனில், ஒருவரை தொடர்பு கொள்ளவும், செய்திகளைப் பெறவும், செயலிகளை பயன்படுத்தி வேலை செய்யவும், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்கவும், சமூக ஊடகங்கள் வழியாக இணைந்திருக்கவும் என பல நோக்கங்களுக்காக அவற்றைப் பயன்படுத்துகிறோம்.
5ஜி சேவை:
இந்த நிலையில், தொலை தொடர்பு சேவையில் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. கடந்த 2016ஆம் ஆண்டு அறிமுகமான ஜியோ, வாடிக்கையாளர்களை கவர பல இலவச திட்டங்களை அள்ளிக் கொடுத்தது. இதனை அடுத்து, கணிசமான வாடிக்கையாளர்களை பெற்ற பிறகு சலுகைகளை குறைத்து கட்டணத்தை அதிகரிக்க தொடங்கியது.
குறிப்பாக, ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனம் கடந்த 2022ஆம் ஆண்டு 5ஜி சேவையை ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்கள் அறிமுகப்படுத்தின. 4ஜி நெட்வொர்க்கை விட 5ஜி நெட்வொர்க்கின் வேகம் அதிகமாக இருப்பதால் வாடிக்கையாளர்கள் 5 சேவையை பயன்படுத்தி வருகின்றனர்.
நாடு முழுவதும் 5ஜி சேவை பயன்படுத்தி வருவோரின் எண்ணிக்கை 125 மில்லியனாக உள்ளது. 2024ஆம் ஆண்டின் இறுதிக்குள் நாட்டில் 5ஜி பயனர்களின் எண்ணிக்கை 200 மில்லியனைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு 4ஜி கட்டணத்திலேயே 5ஜி சேவை கட்டணம் உள்ளன.
வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த ஜியோ, ஏர்டெல்:
இந்த சூழலில் தான் வருவாயை பெருக்கும் வகையில், ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் 5ஜி சேவைக்கான கட்டணத்தை உயர்த்த வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 5ஜி சேவை அறிமுகப்படுத்தப்படவுடன் அன்லிமெட்டெடு 5ஜி சேவை வழங்கப்பட்டு வருகிறது.
இந்த 5 அன்லிமெட்டெடு சேவையை திரும்ப பெற்று, 4ஜி கட்டணத்தை விட 5 முதல் 10 சதவீதம் கட்டணம் வசூலிக்க ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.இந்த கட்டணம் உணர்வு 6 மாதங்களுக்கு பிறகு அமலுக்கு வருவதாக கூறப்படுகிறது. ஏர்டெலில் குறைந்தபட்ச சேவை கட்டணம் ரூ.200ஆக உயர்த்தப்பட்ட நிலையில், அத்தொகை ரூ.250ஆக உயரக்கூட வாய்ப்பிருக்கிறது.
அதேபோல, ஜியோவில் குறைந்தபட்ச சேவை கட்டணம் ரூ.149 ஆக உள்ளது. இத்தொகை 6 மாதங்களுக்குள் 200ஆக உயரக்கூட வாய்ப்பிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவல் ஜியோ மற்றும் ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்க