முன்னணி டெலிகாம் நிறுவனமான எர்டெல் 375 மில்லியன் பயனாளர்களின் தரவுகள் லீக் ஆனது உண்மையில்லை என்று தெரிவித்துள்ளது. 


ஏர்டெல் இந்தியா நிறுவனத்தின் பயனாளர்களின் தனிநபர் விவரங்கள் லீக் செய்யப்பட்டு விற்பனைக்கு கிடைத்ததாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. ஏர்டெல் பயனர்களின் ஆதார் எண், அடையாள அட்டை, முகவரி, தொடர்பு எண் உள்ளிட்டவை டார்க் வெப்-ல் விற்பனை செய்யப்படுவதாக தகவல்கல் வெளியாகின. இது பயனாளர்களை அதிர்ச்சிக்குள்ளாகியது. 






ஏர்டெல் நிறுவனம் பதில்:


பயனாளர்கள் தகவல் லீக் குறித்து ஏர்டெல் வெளியிட்டுள்ள பதிலில், “ பயனாளர்களின் தகவல்கள் லீக் ஆனதாக வெளியாக தகவல் உண்மையானது இல்லை. எங்களின் பயனாளர்களின் தனிப்பட்ட விவரங்களை பாதுகாப்புடன் இருப்பதற்கு முக்கியத்துவம் அளித்து அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்படும். ” என்று தெரிவித்துள்ளது.


ஏர்டெல் பயனாளர்களின் தகவல்கள் விற்பனைக்கு கிடைப்பதாக 'xenZen' என்ற ஹேக்கர் அறிவிப்பு வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 50 ஆயிரம் டாலர் மதிப்புள்ள தரவுகள் விற்பனை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


பயனாளர்கள் தரவுகள் லீக் ஆகவில்லை என ஏர்டெல் நிறுவனம் தெரிவித்திருக்கிறது. இருப்பினும், தொழில்நுட்ப ரீதிலியாக டிஜிட்டல் முறையில் பெறப்படும் தகவல்கள், மொபைலுக்கு வரும் மெசேஜ் லிங், இமெயில் உள்ளிட்டவற்றை அதிகாரப்பூர்வமான நிறுவனத்திடமிருந்து வருகிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும் என்று நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.