ஜனவரி 19-ம் தேதியான இன்று, சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல இடங்களில் ஏர்டெல் நெட்வொர்க் முடங்கியதால், வாடிக்கையாளர்கள் அவதிக்கு உள்ளாகினார். இந்நிலையில், நெட்வொர்க் பிரச்னையை சரி செய்துவிட்டதாக ஏர்டெல் இந்தியா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறது.
இது குறித்து ஏர்டெல் வெளியிட்டுள்ள பதிவில், ”அன்புள்ள தமிழக வாடிக்கையாளர்களே. எங்கள் நெட்வொர்க்கில் சிறிய தொழில்நுட்ப சிக்கல் இருந்தது. அது இப்போது சரி செய்யப்பட்டது. உங்கள் மொபைலை மறுதொடக்கம் செய்யவும். Please DM us if you need help. சிரமத்திற்கு மன்னிக்கவும். நன்றி!” என தெரிவித்திருக்கிறது.
ஏர்டெல் இந்தியாவின் மற்றொரு உதவி பக்கமான ஏர்டெல் கேர்ஸ் ட்விட்டர் பக்கத்தை, கிட்டத்தட்ட 5 லட்சம் பேர் பின் தொடர்கின்றனர். தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் நெட்வொர்க் பிரச்சனை இருந்ததை அடுத்து, தமிழ் மொழியிலேயே பிரச்சனை சரிசெய்யப்பட்டது குறித்து பதிவிட்ட ஏர்டெல் நிறுவனத்தை மக்கள் பாராட்டி வருகின்றனர்.
இன்னொரு புறம், மிகவும் மோசமான நெட்வொர்க், அடிக்கடி பிரச்னை ஏற்படுவதை தடுக்க வேண்டும் எனவும் கருத்துகளை முன்வைத்திருக்கின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்