தொலைத்தொடர்பு சேவை நிறுவனமான ஏர்டெல் தனது வாடிக்கையாளர்களுக்கு அவ்வப்போது அசத்தலான திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் தனது போஸ்பெய்ட் வாடிக்கையாளர்களுக்கு புதிய திட்டம் ஒன்றினை வெளியிட்டுள்ளது. ஆல் இன் ஒன் என்ற வரிசையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த திட்டத்திற்கு பயனாளர்கள் வரவேற்பு அளித்துள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை அறிமுகப்படுத்தப்பட்ட புதிய திட்டத்திற்கு “Airtel Black ” என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த ஒரே திட்டத்தின் மூலம் போஸ்ட்பெயிட், டி.டி.ஹெச். மற்றும் பைபர் சேவைகளுக்கு பொதுவான கட்டணத்தை செலுத்திக்கொள்ள முடியும். இந்த புதிய திட்டத்தின் துவக்க விலை 998 ரூபாய் ஆகும். இதனை பெறுவதற்கு ஏர்டெல் வாடிக்கையாளர் மையத்தை தொடர்புக்கொண்டு, எந்தெந்த சேவையை பெற விரும்புகிறோமோ அதனை குறிப்பிட வேண்டும். தனித்தனி சேவைகளுக்கு தனித்தனி கட்டணம் செலுத்திய சூழலில் ஒரே திட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் Airtel Black திட்டத்திற்கு வரவேற்பு அதிகமாக உள்ளது.
கட்டண விவரங்கள் :
இந்த சேவை ரூ 998 முதல் 2,099 ரூபாய் வரையில் கிடைக்கிறது. டி.டி.ஹெச் மற்றும் 2 போஸ்ட்பெயிட் மொபைல் இணைப்பு ஆகிய இரண்டு சேவைகளுக்கு மாதம் ரூ. 998, இதுவே இதன் தொடக்க விலையாகும். அடுத்ததாக டி.டி.ஹெச் கனெக்ஷன் மற்றும் 3 போஸ்ட்பெயிட் மொபைல் இணைப்பிற்கு மாதம் ரூ. 1,349 செலுத்த வேண்டும்.இதேபோல பைபர் கனெக்ஷன் மற்றும் 2 போஸ்ட்பெயிட் மொபைல் இணைப்பிற்கு மாதம் ரூ. 1,598 செலுத்திக்கொள்ளலாம். பைபர், டி.டி.ஹெச் கனெக்ஷன் மற்றும் 3 போஸ்ட்பெயிட் மொபைல் இணைப்பிற்கு மாதம் ரூ. 2,099 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
உங்களுக்கு அருகிலுள்ள ஏர்டெல் சேவை மையங்களுக்கு நேரில் சென்று இந்த திட்டம் குறித்த விவரங்களை பெறலாம். இது தவிர 8826655555 எண் ஒன்றும் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்புகொண்டால் Airtel Black குறித்த விவரங்களை தெரிந்துகொள்ளலாம். இந்த திட்டம் ஏர்டெல் ப்ரீபெயிட் இணைப்புகளுக்கு பொருந்தாது.