வெயிலில் வாடி வதங்கி வீட்டுக்குள் சென்றதும் பலரது கைகளும் தேடுவது ஏசி ரிமோட்டைத்தான். எடுத்து ஏசியை ஆன் செய்துவிட்டு சற்று நேரம் ஓய்வெடுத்தால்தான் களைப்பே தீறும்.அதேபோல் இரவில் ஏசியை அடிக்கடி ஆன் செய்வதும் ஆப் செய்வதும் பலரது வழக்கம்.  தேவைப்படும் போது ஆன் செய்யவும், தேவையில்லையென்றால் ஆஃப் செய்யவும்  ஏசி ரிமோட் இருப்பதால் எல்லாம் வசதியாகிவிடுகிறது. ஆனால் இப்படி செய்வது நம் பணத்தை கரைக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா? 


ஏசியோ, டிவியோ நாம் ரிமோட்டை நம்பித்தான் இருக்கிறோம்.தேவையென்றால் ரிமோட்டில் ஒரு அழுத்து ஏசியோ, டிவியோ ஆன் ஆகி விடுகிறது. அப்படியென்றால் நம் வீட்டு ஏசியும்,டிவியும் மெயின் ஸ்விட்சில் ஆன் செய்தே இருக்கிறது என்று அர்த்தம். சிலர் டிவி ஸ்விட்சை ஆப் செய்தாலும் ஏசியையெல்லாம் ஸ்விட் ஆப்செய்வதே இல்லை. எங்காவது வெளியூர் பயணம் என்றால் மட்டுமே ஏசி ஸ்விட்சை ஆப் செய்வார்கள்.இப்படியெல்லா இருந்தால் உங்கள் மின்சாரத்தை சத்தமில்லாமல் அந்த மெஷில் இழுத்துகொண்டே இருக்கும் என்கிறது ஒரு ஆய்வு.




அதாவது ஸ்விட்சை ஆப்செய்யாமல் மெஷினை மட்டும் ஆப் செய்தால் ஏசி, டிவி, மியூசிக் சிஸ்டம், சார்ஜர்கள் எல்லாம் சத்தமின்றி கரண்டை கொஞ்சமாக இழுத்துக்கொண்டே இருக்குமாம். குடிமக்கள் நுகர்வோர் மற்றும் குடிமை நடவடிக்கை குழுவின் ஆய்வின்படி இந்த விவரம் தற்போது தெரியவந்துள்ளது.


ஆய்வுமுடிவின்படி, இப்படி சத்தமில்லாமல் வீணாகும் மின்சாரம் 174 யூனிட்க்கும் அதிகமாகும்.அப்படியென்றால் வருடத்துக்கு ரூ.1000க்கு மேல் நீங்கள் தேவையில்லாமல் கரண்டுக்கு செலவு செய்கிறீர்கள் என அர்த்தம். இந்த யூனிட் மின்சாரத்தால் இரண்டு 10வாட் எல்இடி பல்புகளை ஒரு வருடத்துக்கு தடையின்றி இயக்கமுடியும் அல்லது 5 ஸ்டார் ஏசியை 116 மணி நேரத்துக்கு நீங்கள் இயக்க முடியும்.


இந்த ஆய்வு கடந்த ஆண்டு 7 மாவட்ட மக்களிடம் எடுக்கப்பட்டுள்ளது. டிவி, செட்டாப் பாக்ஸ், ஏசி,சவுண்ட் சிஸ்டம் ஆகிய மின் சாதனங்களை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டுள்ளனர். அந்த ஆய்வில் பதிலளித்த 70%க்கும் அதிகமானவர்கள் 4 மின் சாதனங்களில் ஸ்விசுகளையும் ஆஃப் செய்வதில்லை எனக் குறிப்பிட்டுள்ளனர்.




இது குறித்து தெரிவித்துள்ள குடிமக்கள் நுகர்வோர் மற்றும் குடிமை நடவடிக்கை குழுவின் ஆய்வாளர் ஒருவர், ''மக்கள் பயன்படுத்தாமல் வீணாகும் மின்சாரம் இது. தற்போது மின்சாரத்துக்கு மிகக்குறைவான விலையே அரசு நிர்ணயிக்கிறது.  அதனால் மக்கள் அசால்டாக இருக்கின்றனர். தெரிந்தே ஸ்விட்சுகளை ஆப் செய்யாமல் ரிமோட்டில் இயக்கிக் கொண்டிருக்கின்றனர். ஒரு யூனிட்டுக்கு ரூ.10 வசூலித்தால் இந்த மின்சாரத்தின் செலவு மக்களுக்கு புரியவரும் என்றார்.


செல்போன் சார்ஜரோ, டிவியோ, ஏசியோ, எந்த மின் சாதனமாக இருந்தாலும் அதன் ஸ்விட்சை ஆஃப் செய்து பயன்படுத்த வேண்டும். பயன்படுத்த எளிதாக இருக்கிறது என்பதால் ரிமோட்டை மட்டுமே பயன்படுத்தினால் நிச்சயம் மின்சாரமும் வீணாகி உங்களுக்கும் செலவு அதிகமாகும்.