ஆதார் எண்ணின் மூலம் பல்வேறு மோசடிகள் நடைபெற்றுவரும் நிலையில் அதனைத்தடுக்கும் விதமாக மாஸ்க் ஆதாரை மக்கள் பயன்படுத்தலாம் என UIDAI தெரிவித்துள்ளது.
இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமக்களும் கட்டாயம் வைத்திருக்க வேண்டிய ஆவணங்களில் ஒன்றாகிவிட்டது ஆதார். இன்றையச் சூழலில் தடுப்பூசி போடுவது தொடங்கி,குழந்தைகளை பள்ளிக்குச்சேர்ப்பது, வங்கிக்கணக்கு துவங்குவது, ரேசன்கார்டு பதிவு செய்ய, வீடு வாங்குவது அல்லது தவணை முறையில் ஏதாவது ஒரு பொருளை வாங்க வேண்டும் என்று நினைத்தாலும் ஆதார் எண் இல்லாமல் ஒன்றுமே செய்ய முடியாது. அந்தளவிற்கு இதன் பயன்பாடு ஒவ்வொரு நாளும் அதிகரித்துவருகிறது. இப்படி இன்றியமையாத ஒன்றாக இருக்கும் நிலையில் இந்த 12 இலக்க எண்களை வைத்து பல மோசடிகளும் அவ்வப்போது அரங்கேறிவருகிறது. அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் அலுவலகங்ளில் நம்முடைய ஆதார் உள்ள நிலையில் இதனைப்பாதுகாப்பாக எப்படி பயன்படுத்துவது என்ற கேள்வி மக்களிடையே எழத்தொடங்கிவிட்டது. இதனையெல்லாம் நிவர்த்தி செய்யும் வகையில் தான், மாஸ்க் ஆதார் என்ற வசதியை பெற ஆதார் ஆணையம் அனுமதிக்கிறது. அப்படின்னா என்ன என்ற சந்தேகம் நிச்சயம் வரக்கூடும்.
எனவே முதலில் மாஸ்க் ஆதார் என்றால் என்ன? என தெரிந்துக்கொள்வோம்.
ஆதார் ஆணையத்தின் மூலம் வழங்கப்படும் ஆதார் அடையாள அட்டையில் 12 இலக்க ஆதார் எண் வெளிப்படையாக இருக்கும். ஆனால் மாஸ்க் ஆதாரில் 12 இலக்க எண்களில் சில எண்களை மறைக்கப்பட்டிருக்கும். எனவே நம்முடைய ஆதாரை தேவையின்றி யாரும் பயன்படுத்தாமல் இந்த மாஸ்க் ஆதாரை டவுன்லோடு செய்து பயன்படுத்தலாம்.
இந்த மாஸ்க் ஆதாரை, ஆதார் அட்டை வைத்திருக்கும் அனைவரும் டவுன்லோடு செய்து பயன்படுத்தமுடியும். இதில் பிறந்த தேதியையும் மறைத்து டவுன்லோடு செய்துக்கொள்ளலாம். இதனை அனைத்து பொது இடங்களிலும் பயன்படுத்த முடியும் எனவும் ஒருவேளை அதிகாரிகள் இதனை வாங்க மறுக்கும் பட்சத்தில் ஆதார் ஆணையத்தின் புகார் அளிக்கலாம் என ஆணையம் தெரிவித்துள்ளது. ஆனால அரசின் ஓய்வூதியம் பெறுவோருக்கு இத்திட்டம் பொருந்தாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே நம்முடைய பாதுகாப்பு கருதி எப்படி மாஸ்க் ஆதாரை டவுன்லோடு செய்யும் முறையை இங்கே அறிந்துக்கொள்வோம்.
மாஸ்க் ஆதாரை டவுன்லோடு செய்யும் முறை:
முதலில் ஆதார் ஆணையத்தின் uidai.govi.in அல்லது eeadhaar.uidia.gov.in என்ற இணையதளத்திற்கு செல்லவும்.
பின்னர் download Aadhar என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
இதனையடுத்து வரும் பக்கத்தில் உங்களுடைய 12 இலக்க ஆதார் எண், பெயர் மற்றும் பின்கோடு ஆகியவற்றை என்ட்ரி செய்துக்கொள்ள வேண்டும்.
அதேப்பக்கத்தில், உங்களுக்கு download Aadhar or masked Aadhar என்ற இரு ஆப்சன் இருக்கும். நீங்கள் masked Aadhar என்பதை தேர்வு செய்ய வேண்டும். கேப்சா குறயீட்டை உள்ளீடு செய்துக்கொள்ள வேண்டும்.
பின், ஆதாருடன் இணைக்கப்பட்டிருக்கும் மொபைல் எண்ணிற்கு OTP அனுப்பப்படும். இதனை அதற்கான இடத்தில் டைப் செய்து மாக்ஸ் ஆதார் அட்டையை டவுன்லோடு செய்துக்கொள்ளலாம்.
தற்போது நம்முடைய 12 இலக்க ஆதார் எண்ணைப்பயன்படுத்தி பல்வேறு மோசடிகள் நடைபெற்றுவரும் நிலையில் அதிலிருந்து நம்மைப்பாதுகாத்துக்கொள்வது அவசியமான ஒன்று. எனவே மேற்கண்ட வழிமுறையைப்பயன்படுத்தி இனி நாமும் மாஸ்க் ஆதாரை டவுன்லோடு செய்து பயன்படுத்த தொடங்குவோம்.