டெல்லியில்  நடைபெற்ற டெலிகாம் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவில் 5ஜி சேவையை தொடங்கி வைத்தார். அக்டோபர் மாதம் 1 ஆம் தேதி முதல் 4 ஆம் தேதி வரையில்  புது தில்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் நடைபெறும் இந்திய மொபைல் காங்கிரஸ் 2022 இன் 6வது பதிப்பின் முதல் நாள் விழாவில்  மிகவும் எதிர்பார்க்கப்பட்ட  5ஜி சேவையை பிரதமர்  மோடி தொடங்கி வைத்தார். தீபாவளிக்கு பிறகு 13 பெரிய இந்திய நகரங்களில் 5ஜி சேவை கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.




​​ரிலையன்ஸ் ஜியோ இந்த ஆண்டு தீபாவளிக்குள் டெல்லி, மும்பை, கொல்கத்தா மற்றும் சென்னை உள்ளிட்ட 4 நகரங்களுக்கு தனது ஜியோ 5G சேவைகளை வழங்குவதை ஏற்கனவே உறுதிப்படுத்தியுள்ளது. ஆனால் இந்த நகரங்களில் வசிக்கும் அனைவருக்கும் ஜியோ மற்றும் ஏர்டெல் வழங்கும் 5ஜி சேவைகள் கிடைக்கும் என்று அர்த்தம் இல்லை. குறிப்பிட்ட சில நான்கு நகரங்களில் மட்டுமே 5 ஜி சேவை தொடங்கி வைக்கப்படும்.டெல்லி சர்வதேச விமான நிலைய லிமிடெட் (DIAL) இந்தியாவில் 5G அதிகாரப்பூர்வ அறிமுகத்திற்கு முன்னதாக டெல்லியின் T3 விமான நிலையத்தில் 5G சேவைகள் கிடைக்கும் என்று ஏற்கனவே அறிவித்துள்ளது. டெல்லி ஏர்போர்ட் டெர்மினல் 3ல் இருந்து பறக்கும் பயணிகள் விரைவில் 5ஜி நெட்வொர்க்கைப் பயன்படுத்த முடியும் என்று DIAL அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளது. விமான நிலையத்தில் இருக்கும் வைஃபை அமைப்பை விட 5ஜி நெட்வொர்க் 20 மடங்கு வேகமான டேட்டா வேகத்தை வழங்கும் என்று ஆணையம் தெரிவித்துள்ளது.


5ஜி சேவை கிடைக்கும் 13 நகரங்களில் பட்டியல் இதோ :



  1. சென்னை

  2. டெல்லி

  3. கொல்கத்தா

  4. மும்பை

  5. அகமதாபாத்

  6. பெங்களூரு

  7. சண்டிகர்

  8. காந்திநகர்

  9. குருகிராம்

  10. ஹைதராபாத்

  11.  ஜாம்நகர்

  12. லக்னோ

  13. புனே




தீபாவளி கழித்து மேற்கண்ட இடங்களின் சில நகரங்களில் மட்டுமே 5 ஜி சேவை துவங்க உள்ளது. முதலில் ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகியவை முதலில் இந்தியாவில் 5G சேவைகளை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,  Vodafone-idea (Vi) அதன் 5G சேவையை இன்னும் சோதித்து வருகிறது,  எனவே மேலும் சிறிது காலம் ஆகலாம். ஏர்டெல் மற்றும் ஜியோ இரண்டும் 2023 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் அதிகாரப்பூர்வமாக 5ஜியை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.5ஜி ஆனது 2023 மற்றும் 2040 க்கு இடையில் இந்தியப் பொருளாதாரத்திற்கு ₹ 36.4 டிரில்லியன் ($455 பில்லியன்) பயனளிக்கும் என்று மொபைல் நெட்வொர்க் ஆபரேட்டர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உலகளாவிய தொழில்துறை அமைப்பின் சமீபத்திய அறிக்கை மதிப்பிடப்பட்டுள்ளது