மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 5ஜி சேவையானது இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படுள்ளது. முதற்கட்டமாக சென்னை , பெங்களூர் , மும்பை உள்ளிட்ட 13 நகரங்களில் 5 ஜி சேவை கிடைக்கும் என கூறப்பட்டுள்ள நிலையில் , படிப்படியாக அனைத்து இடங்களிலும் பயனாளர்கள் 5 ஜி சேவையை பெறவுள்ளார்கள் . மற்ற நாடுகளில் அதிகம் வரவேற்பை பெற்ற 5ஜி சேவையில் என்ன மாதிரியான வசதிகளை பயனாளர்கள் அனுபவிக்க முடியும் என்பதை இந்த செய்தித்தொகுப்பில் பார்க்கலாம்.


 


அதிவேக இணைய அனுகல் :


5ஜி சேவை முழுமையாக அமலுக்கு வந்தவுடன், அதிவேக இணைய அனுபவத்தைப் பெறத் தொடங்குவீர்கள், அதிவேக இணையம் இன்று மக்களின் தேவையாகிவிட்டதால் அனைவரும் எதிர்பார்க்கும் சேவை இது. 5G ஆனது 4G ஐ விட பல மடங்கு வேகமான வேகத்தை வழங்குகிறது.




விரிவான 5G நெட்வொர்க்:


4G சேவையின் முக்கிய பிரச்சனைகளில் ஒன்று, பல பகுதிகளில் நெட்வொர்க்  கிடைக்காது.  ஆனால் 5G சேவையை அறிமுகப்படுத்திய பிறகு, நீங்கள் எல்லா இடங்களிலும் நெட்வொர்க்கின் சிறந்த கவரேஜைப் பெறுவீர்கள். மற்றும் இணைய அணுகல் மிகவும் எளிதாக இருக்கும் என கூறப்படுகிறது.



அப்லோட் செய்யும் வேகம் :


5G சேவையின் மூலம் முன்பு எப்போதும் நீங்கள் அனுபவித்திடாத அப்லோட் வேககத்தை பெற முடியும்.


சிறந்த அழைப்பு தரம்:


5G வந்த பிறகு, அழைப்பு முன்பை விட சிறந்த தரத்தில் இருக்கும். 4G நெட்வொர்க்கில் மக்கள் எதிர்கொள்ளும் அழைப்புகளின் போது சில   குறுக்கீடுகள் இருந்திருந்தால் , இனி அது இருக்காது.



கால் ட்ராப் பிரச்சனை இருக்காது:


4ஜி நெட்வொர்க்குகளில் கால் டிராப் பிரச்சனை மிகவும் பொதுவானது மற்றும் பல ஆண்டுகளாக இது பயனாளர்களுக்கு இடையூறாக இருந்திருக்கிறது. 5 ஜி சேவை இதற்கு பலனாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. எனவே நீங்கள் 5ஜி மூலம் உங்களுக்கு பிரியமானவர்களுடன் பேசிக்கொண்டிருக்கும் பொழுது எவ்வித இடையூறுகளும் இல்லாமல் பேச முடியும்.




தீபாவளிக்கு பிறகு நிறுவனங்கள் 5ஜி சேவையை அறிமுகப்படுத்தும் என அறிவிக்கப்படிருந்த நிலையில் , ஏர்டெல் நிறுவனம்  கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி 5 ஜி சேவையை அறிமுகப்படுத்தியது. இது குறித்து அறிவிப்பு வெளியிட்ட ஏர்டெல் நிறுவம் தங்களில் 5ஜி சேவயின்  வேகம், 4ஜியை விட 30 மடங்கு அதிகமாக இருக்கும். 4ஜி சிம்கார்டிலேயே 5ஜி சேவையை பெறலாம். 5ஜிக்காக இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் எனக் கூறியுள்ளது. டெல்லி, மும்பை, பெங்களூரு, சென்னை, ஹைதராபாத்,சிலிகுரி, நாக்பூர் மற்றும் வாரணாசி உள்ளிட்ட நகரங்களில் இன்றிலிருந்து 5ஜி சேவையை பயன்படுத்தலாம். என தெரிவித்திருந்தது. இப்போதைக்கு ஆப்பிள், சாம்சங், சியோமி, விவோ, ஓப்போ, ரியல்மீ மற்றும் ஒன் பிளஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் 5ஜி சேவை வழங்கும் ஸ்மாட்ஃபோன் மாடல்களை வழங்கி வருகிறது. 5ஜி தொழில்நுட்பத்தின் வேகம் ஒரு நொடிக்கு 600 மெகா பிட் ஆக இருக்கும் என்று கூறப்படுள்ளது.