இந்தியாவின் இரண்டாவது பெரிய டெலிகாம் சேவை நிறுவனமாக இருக்கும் பார்தி ஏர்டெல் சேவை நிறுவனம் தனது 5ஜி சேவையை நாட்டின் எட்டு முக்கிய நகரத்தில் அறிமுகம் செய்துள்ளது. அதற்குள், வாடிக்கையாளர்களின் வரவேற்பு மிகவும் சிறப்பாக உள்ளது. கடந்த ஒரு மாதத்தில் பார்தி ஏர்டெல் நிறுவனம் 10 லட்சத்திற்கும் அதிகமாக வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளதாக அறிவித்துள்ளது. ஏர்டெல் தனது 5ஜி சேவைக்காக டெலிகாம் கருவிகளை நோக்கியா, எரிக்சன், சாம்சங் ஆகிய நிறுவனங்களிடம் இருந்து வாங்க முடிவெடுத்துள்ளது. சீன நாட்டின் டெலிகாம் உபகரணத் தயாரிப்பு நிறுவனங்களால் இணையப் பாதுகாப்புத் தொடர்பான பல்வேறு சந்தேகங்கள் எழுந்துவரும் காரணத்தால் மத்திய அரசு தகுதி சான்றிதழ் அளித்த நிறுவனங்களிடம் இருந்து மட்டுமே டெலிகாம் உபகரணங்களைக் கொள்முதல் செய்ய வேண்டும் என இந்திய டெலிகாம் நிறுவனங்களுக்கு உத்தரவிட்டு உள்ளதால் அதில் பெரும் முதலீட்டை செலுத்தியுள்ளது ஏர்டெல்.



நாடுமுழுவதும் அளிப்போம்


இதுகுறித்து பேசிய பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரியான ரன்தீப் செகோன், "எங்களது நெட்வொர்க்-ஐ தொடர்ந்து மேம்படுத்தி வருகிறோம், இதனால் இந்தியாவில் இருக்கும் அனைத்து 5ஜி கருவிகளுக்கும் விரைவில் ஏர்டெல் 5ஜி பிளஸ் நெட்வொர்க் சேவையை நாங்கள் அளிப்போம். விரைவில் நாடு முழுவதும் 5ஜி சேவை அளிக்கும் வகையில் நெட்வொர்க்-ஐ மேம்படுத்தி வருகிறோம்," என்று தெரிவித்துள்ளார்.


தொடர்புடைய செய்திகள்: IPL 2023 Auction : சூடுபிடிக்கும் ஐ.பி.எல். 2023 ஏலம்..! எப்போ நடக்கிறது..? எங்கு நடக்கிறது..? முழு விவரம் உள்ளே..!


எந்தெந்த இடங்கில் கிடைக்கிறது


ஏர்டெல் நிறுவனம் சென்னை, மும்பை, பெங்களூரு, ஹைதராபாத், டெல்லி, வாரணாசி, நாக்பூர் மற்றும் சிலிகுரி உள்ளிட்ட இந்தியாவின் எட்டு நகரங்களில் ஏர்டெல் 5ஜி சேவையை வழங்கியுள்ளது. இந்த நகரங்களில் சில பகுதிகளில் மட்டுமே டவர் வசதி உள்ளதால் அதிலும் சில பகுதிகளில் மட்டுமே 5ஜி சேவை வாடிக்கையாளர்கள் பெற்று வருகின்றனர். ஏர்டெல் நிறுவனம் தொடர்ந்து தனது நெட்வொர்க்கை 5ஜி சேவைக்காக மேம்படுத்தி வரும் நிலையில் நாட்டின் பிற பகுதிகளிலும் படிப்படியாக 5ஜி சேவை அறிமுகம் செய்யத் திட்டமிட்டு உள்ளதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.



எப்படி கண்டுபிடிப்பது?


உங்கள் ஃபோனில் 5ஜி சப்போர்ட் உள்ளதா என்பதை எப்படி சரிபார்க்கலாம் என்பது குறித்து இங்கே தெரிந்துகொள்ளவும்:


ஸ்டெப் 1: உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள 'செட்டிங்ஸ்' என்ற ஆப்ஷனை தேர்வு செய்யவும்.


ஸ்டெப் 2: அதில் ‘சிம் கார்டு & மொபைல் டேட்டா’ ஆப்ஷனை கிளிக் செய்யவும்.


ஸ்டெப் 3: 'சிம்'மைத் தேர்ந்தெடுக்கவும்


ஸ்டெப் 4: சிம் தகவல் மற்றும் அமைப்புகள் மெனுவின் கீழ் 'பிரிஃபெர்ட் நெட்வொர்க் டைப்' என்பதைச் சரிபார்க்கவும்.


ஸ்டெப் 5: அந்த ஆப்ஷனின் கீழ் 4ஜி, 3ஜி, 2ஜி என்று லிஸ்ட் செய்யப்பட்டிருக்கும். அதில் 5ஜி என்பது பட்டியலிடப்பட்டிருந்தால், உங்கள் சாதனம் 5ஜி சாதனம் ஆகும்.


ஏர்டெல் ஆப் மூலமும் கண்டறியலாம்


ஏர்டெல் பயனர்கள் ஏர்டெல் ஆப்பை பயன்படுத்தியும் 5G மொபைலா என்பதை கண்டறியலாம். அப்டேட் செய்யப்பட்ட ஏர்டெல் தேங்க்ஸ் ஆப் வைத்திருந்தீர்களேயானால், அதில் 5ஜி என்ற பெயர் தானாகவே இணைந்திருக்கும். அப்படி இருந்தால் உங்கள் பகுதியில் 5ஜி வந்துவிட்டதா என்று கண்டறிய அதிலேயே ஒரு ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும். பயனர்கள் அறிவிப்புகளில் இருந்து ‘Airtel 5G Plus live in india' என்னும் ஆப்ஷன் இருக்கும். அதனை பயன்படுத்தி உங்கள் பகுதியில் 5G இருக்கிறதா என்பதை சரிபார்க்கலாம். Apple Realme, Xiaomi, Oppo, Vivo, OnePlus மற்றும் Samsung உள்ளிட்ட பிராண்டுகளில் எந்த போன் 5G சப்போர்டுடன் வருகிறது என்னும் போன்களின் பட்டியலை Airtel தேங்க்ஸ் ஆப் வழங்குகிறது, அதில் சென்றும் கண்டறியலாம்.