சரியான வழக்கறிஞர் வாதாடவில்லை என்றால் ஒரு சில நேரங்களில் வழக்கின் திசையே மாறி விடும். அப்படி ஒரு வழக்கு வேறு திசையில் சென்ற காரணத்தால் ஒருவர் 17 ஆண்டுக்காலம் சிறை தண்டனை அனுபவித்துள்ளார். 17 ஆண்டு சிறை வாசத்திற்கு பிறகு தற்போது அவரை உச்சநீதிமன்றம் விடுவித்துள்ளது. அதற்கு காரணம் என்ன?
2006ஆம் ஆண்டு உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு 3 கொலை சம்பவம் தொடர்பாக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இந்தத் தண்டனையை எதிர்த்து அலாகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கை அலாகாபாத் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதைத் தொடர் அவர் 2009ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த வழக்கையும் ஆகஸ்ட் மாதம் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதைத் தொடர்ந்து அவர் கடந்த 17 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வருகிறார்.
இந்நிலையில் தன்னுடைய விரைவான விடுதலை தொடர்பாக வழக்கறிஞர்களை அணுகியுள்ளார். அப்போது அவர்கள் அந்த நபர் கொலை சம்பவம் நடைபெற்ற போது இவர் சிறுவர் என்பதை அறிந்துள்ளனர். அதாவது இந்த நபர் 1986ஆம் ஆண்டு மே 16ஆம் தேதி பிறந்துள்ளார். 2004ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 4ஆம் தேதி இந்த கொலை குற்றம் நடைபெற்ற போது அவருக்கு 17 வயது 7 மாதங்கள் மற்றும் 23 நாட்கள் மட்டுமே ஆகியிருந்தது. ஆகவே அவர் சிறுவராகவே கருதப்பட வேண்டும் என்பதை வழக்கறிஞர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதை வைத்து உச்சநீதிமன்றத்தில் வழக்கை மீண்டும் தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மாவட்ட சிறுவர் நீதி குழுவிற்கு பரிந்துரை செய்தது. அவர்கள் இந்த நபரின் பிறந்த தேதி மற்றும் வயது தொடர்பாக விரிவான விசாரணையை நடத்தியுள்ளனர். அதில் கொலை சம்பவம் நடைபெற்ற போது இவர் சிறுவராக இருந்த உறுதியானது. இது உச்சநீதிமன்றத்தில் அறிக்கையாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து இந்த வழக்கில் இருந்த அந்த நபரை உச்சநீதிமன்றம் விடுவித்துள்ளது. ஏனென்றால் சிறுவராக இருந்தால் குற்றச்சம்பவங்களுக்கு 3 ஆண்டுகள் வரை தான் தண்டனை அனுபவிக்க முடியும். தற்போது அந்த நபர் 17 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்தால் அவரை உச்சநீதிமன்றம் விடுவித்துள்ளது. 17 ஆண்டுகள் சிறை தண்டனைக்கு பிறகு ஒருவர் வெளியே வந்துள்ள சம்பவம் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்