இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங், கடந்த 2019-ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் மற்றும் ஐபிஎல் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார். தற்போது, வெளிநாட்டு லீக்குகளில் மட்டுமே விளையாடி வரும் அவர், சமீபத்தில் நடைபெற்ற சாலை பாதுகாப்பு உலகத் தொடரில் சிறப்பாக விளையாடி பழைய யுவியை நியாபகப்படுத்தினார்.

Continues below advertisement

தற்போது அவர், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தனது புதிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில், அவர்  நீண்ட முடியுடன் நியூ லுக்கில் இருக்கிறார். அத்துடன், “ஆம் அல்லது இல்லை அல்லது இருக்கலாம்?” என்று பதிவிட்டுள்ளார்.

யுவராஜின் இந்த நியூ லுக், ஒரு மணிநேரத்தில் சுமார் 2.25 லைக்குகளை பெற்றது. மேலும், இந்த லுக்கில் பாட்ஷாவை போல இருப்பதாக ஷிகார் தவான், இர்ஃபான் பதான் உள்ளிட்ட வீரர்கள் பதிவிட்டனர். தற்போது, இந்தப் புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.  

Continues below advertisement