இந்தியாவில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், கடந்த சில தினங்களாக பிரபலங்கள் தொற்றால் பாதிக்கப்படுவது அதிகரித்து வருகிறது.
தனக்கு கொரோனா தொற்று இருப்பதால் வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளேன் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் ட்வீட் செய்திருந்தார். தற்போது, சச்சினை தொடர்ந்து முன்னாள் வீரர் யூசுப் பதானும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து யூசுப் பதான் தனது ட்விட்டர் பக்கத்தில், “எனக்கு லேசான கொரோனா அறிகுறிகள் இருந்ததை தொடர்ந்து, பரிசோதனை மேற்கொண்டேன். அதில் தொற்று உறுதியானது. இதையடுத்து வீட்டிலேயே என்னை தனிமைப்படுத்திக்கொண்டேன். தேவையான மருத்துவ உதவிகள் எனக்கு வழங்கப்பட்டு வருகிறது. முன்னதாக, என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா பரிசோதனை செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற உலக சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கிரிக்கெட் தொடரில், இந்தியா லெஜண்ட்ஸ் அணி சார்பில் சச்சின், யூசுப் பதான் ஆகியோர் விளையாடினர் என்பது குறிப்பிடத்தக்கது.
<blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">I've tested positive for COVID-19 today with mild symptoms. Post the confirmation, I have quarantined myself at home and taking all the necessary precautions and medication required.<br><br>I would request those who came in contact with me to get themselves tested at the earliest.</p>— Yusuf Pathan (@iamyusufpathan) <a >March 27, 2021</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>