பரிவர்த்தனை தோல்வியடைந்தாலும், வங்கி உங்களிடம் அபராதம் வசூலிக்கிறது.. தெரியுமா உங்களுக்கு?

இந்த புதிய விதி கடந்த டிசம்பர் 2020 தொடங்கி அமல்படுத்தப்பட்டது. இந்த அபராதக் கட்டணம் ஒவ்வொரு வங்கிகளுக்கும் மாறும். ஒவ்வொரு வங்கியும் எவ்வளவு அபராதக் கட்டணம் வசூலிக்கிறது தெரியுமா?

Continues below advertisement

வங்கிகளில் பணப்பரிவர்த்தனைகளைக் கடந்து ஆன்லைன், டெபிட் கார்ட் மற்றும் வயர் எனப் பலவகையான பரிவர்த்தனை முறைகள் இருக்கின்றன. இவற்றில் சில பரிவர்த்தனைகள் இலவசம் என்றாலும் சில பரிவர்த்தனைகளுக்கு வங்கிகள் கட்டணம் வசூலிக்கின்றன.

Continues below advertisement

சில சமயங்களில் ஏடிஎம் பரிவர்த்தனைகள் சிலவற்றுக்குக் கூட அப்படியான கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன. உதாரணத்துக்கு நமது கணக்கு இருப்பில் இருக்கும் தொகை தெரியாமல் அதற்கும் கூடுதலாகப் பணம் எடுக்க முயலும்போது பரிவர்த்தனைத் தோல்வியுற்று வங்கி நம்மிடமிருந்து ரூ 20-25 வரை கட்டணம் வசூலிக்கிறது.

அதாவது ரூ.3000 வங்கியிருப்பு இருக்கும் நிலையில் நீங்கள் ரூ.3500 பணம் எடுக்க முயலும்போது வங்கி உங்களது இருப்புத்தொகையான ரூபாய்.3000-இல் இருந்து ரூ.20-25 அபராதத் தொகையைப் பிடித்துக்கொள்ளும்.


இந்த புதிய விதி கடந்த டிசம்பர் 2020 தொடங்கி அமல்படுத்தப்பட்டது. இந்த அபராதக் கட்டணம் ஒவ்வொரு வங்கிகளுக்கும் மாறும். ஒவ்வொரு வங்கியும் எவ்வளவு அபராதக் கட்டணம் வசூலிக்கிறது தெரியுமா?

  • ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா: 20 ரூபாய் கட்டணம் வசூலிக்கும் ஸ்டேட் பாங்க், கூடவே அதற்கான ஜி.எஸ்.டி. வரியையும் சேர்த்து உங்களது கணக்கு இருப்பிலிருந்து எடுத்துக்கொள்கிறது.
  • ஹெச்.டி.எஃப்.சி வங்கி ஏ.டி.எம் கார்டு கொண்டு இதர வங்கி ஏடிஎம்களில் பணப் பரிவர்த்தனைத் தோல்வியுற்றால் மட்டும் ரூ.25 அபராதத் தொகையை எடுத்துக்கொள்கிறது.
  • கோடக் மஹிந்திரா வங்கி, ஆக்சிஸ் வங்கி மற்றும் யெஸ் பாங்க் ஆகியவை தலா ரூ.25 அபராதத் தொகையை நமது கணக்கிலிருந்து எடுத்துக்கொள்கிறார்கள்.

இந்த அபராதத் தொகை செலுத்துவதைத் தவிர்ப்பது எப்படி?

நமது கணக்கின் பண இருப்பு விவரங்களை அறிந்துகொள்வதன் வழியாக இதனைத் தவிர்க்கமுடியும். பெரும்பாலான வங்கிகள் எஸ்.எம்.எஸ் சேவை வழியாக நமது பண இருப்பு அறியும் வசதியை நிறுவியிருக்கிறார்கள் அல்லது வங்கியில் அப்ளிகேஷன்கள் வழியாக அறிந்துகொள்ளலாம்.

ஏடிஎம்களில் பணம் எடுப்பதற்கு முன்பு அதிலேயே நமது வங்கி இருப்பு விவரங்களையும் தெரிந்துகொள்ளலாம். இதர வங்கி ஏடிஎம்களில் நமது வங்கி இருப்புத்தொகையை தெரிந்துகொள்வதற்குத் தனிக்கட்டணம் செலுத்த வேண்டும் எஸ்.பி.ஐ உள்ளிட்ட சில வங்கிகள் முதல் 5 இருப்பு விசாரணைகளுக்கு அந்த சேவையை இலவசமாகவே தருகிறார்கள். அதற்குப்பிறகு மட்டுமே வரியுடன் கூடிய சேவைக்கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

அடுத்தமுறை ஏ.டி.எம்.மில் பணம் எடுக்கும்போது உங்கள் வங்கி இருப்பு பணம் எவ்வளவு என்பது கவனத்தில் இருக்கட்டும்.

Continues below advertisement
Sponsored Links by Taboola