உலகில் அதிகம் விரும்பும் போட்டிகளில் ஒன்று WWE. 90’ கிட்ஸ்களிடம் இந்த விளையாட்டு போட்டிகளை பற்றி கேட்டால், நாள் முழுக்க தாங்கள் பார்த்த மற்றும் கேட்ட நினைவுகளை அடுக்கடுக்காக கூறுவார்கள். அந்த அளவிற்கு 90’ கிட்ஸ்களுக்கு WWE ரத்தத்தில் ஊறிபோன ஒன்றாக இருந்தது. 


இந்தநிலையில், இன்று (செப்டம்பர் 8ம் தேதி) WWE சூப்பர் ஸ்டார்கள் இந்தியாவின் ஹைதராபாத் நகருக்கு சென்று மக்கள் முன்பு தோன்ற இருக்கின்றனர். இந்த நட்சத்திர பட்டியலில் ஜான் சீனாவும் இருக்கிறார் என்றால் உங்களால் நம்ப முடியுமா..? ஆம்!  உலக ஹெவிவெயிட் சாம்பியன் சேத் ரோலின்ஸ், ஜான் செனா, மகளிர் உலக சாம்பியன் ரியா ரிப்லி, WWE டேக் டீம் சாம்பியன்கள் சாமி ஜெய்ன் மற்றும் கெவின் ஓவன்ஸ், இன்டர்காண்டினென்டல் சாம்பியன் குந்தர், ஜிண்டர் மஹால், வீர், சங்கா, ட்ரூ மெக்கின்டிரே, பெக்டல் லீன்டிரே, பெக்டல் லீன்டிரே, ட்ரூ மெக்கின்டிரே, ட்ரூ மெக்கின்டிரே, , மற்றும் லுட்விக் கைசர் ஆகியோர் மக்களுக்கு நேரடியாக காட்சி அளிக்க இருக்கின்றனர்.


இந்தநிலையில், WWE டேக் டீம் சாம்பியன்கள் சாமி ஜெய்ன் மற்றும் கெவின் ஓவன்ஸ் ஆகியோர் நம் முன்னாள் இந்திய கேப்டன் எம்.எஸ்.தோனி பற்றி பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. WWE நிகழ்வு இன்று ஹைதராபாத்தில் நடைபெறவுள்ள நிலையில், இதை விளம்பரப்படுத்துவதற்காக ஜெய்ன் மற்றும் ஓவன்ஸ் ஜோடி கேமரா முன்பு எதார்த்தமாக பேசிகொண்டு இருந்தனர். அப்போது, இருவரும் தோனியை பற்றி பேசியுள்ளனர். அதுவே! தற்போது ஹாட் டாபிக் நியூஸ்..






கிரிக்கெட்டை பற்றி நான் கேள்விப்பட்டபோதெல்லாம், நான் அதிகம் கேட்டது எம்.எஸ்.தோனியின் பெயரைதான். அவர் இந்தியாவில் மிகவும் பிரபலமானவர் என்பது எனக்கு தெரியும். உலக கிரிக்கெட்டின் மிகப்பெரிய பெயர்களில் எம்.எஸ்.தோனியும் ஒருவர்” என்று சாமி ஜெய்ன் பேசினார். 


சமீபத்தில், கார்லோஸ் அல்கராஸ் மற்றும் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் இடையேயான யுஎஸ் ஓபன் 2023 காலிறுதிப் போட்டியை எம்.எஸ்.தோனி நேரில் கண்டுகளித்தார். இது நியூயார்க்கில் உள்ள ஆர்தர் ஆஷ் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் அல்கராஸ் நெர் செட்களில் அலெக்சாண்டர் ஸ்வெரேவை வீழ்த்தினார். தோனி அமர்ந்து போட்டியை ரசிக்கும் புகைப்படங்களும் அதிக அளவில் வைரலானது. 


யார் இந்த எம்.எஸ்.தோனி..?


இந்திய கிரிக்கெட் அணிக்காக 2007ஆம் ஆண்டு ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை, 2011ஆம் ஆண்டு ஐசிசி ஆடவர் கிரிக்கெட் உலகக் கோப்பை மற்றும் 2013ஆம் ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை வென்ற அணிகளின் கேப்டனாக இருந்த தோனி, 2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.


அனைத்து முக்கிய ஐசிசி கோப்பைகளையும் (50 ஓவர் உலகக் கோப்பை, டி20 உலகக் கோப்பை, மற்றும் சாம்பியன்ஸ் டிராபி) வென்ற ஒரே கேப்டன் எம்.எஸ்.தோனி மட்டுமே.