WTC 2021 | DAY 3 LIVE : முதல் இன்னிங்ஸில் 217 ரன்களுக்கு சுருண்ட இந்திய அணி!

முதல் நாள் ஆட்டம் முழுவதும் மழையால் கைவிடப்பட்ட நிலையில், 2வது நாள் ஆட்டம் போதிய வெளிச்சமின்மை ஏற்பட்டதால் பாதித்தது. இந்நிலையில் 3வது நாள் ஆட்டம் கால தாமதமாக 3.30 மணி அளவில் தொடங்கியது.

அருண்மொழிவர்மன் Last Updated: 20 Jun 2021 06:42 PM

Background

2வது நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய கேப்டன் விராட் கோஹ்லி, துணை கேப்டன் ரஹானே இருவரும் களத்தில் நிற்க இந்திய அணியின் ஸ்கோர் 146/3. காலை முதல் பெய்த மழையால் சவுதாம்ப்டன் மைதானம் ஈரப்பதத்துடன் காட்சியளித்தது, இதனால் திட்டமிட்டபடி 3...More

70/1 - முதல் விக்கெட்டை வீழ்த்திய அஸ்வின்!

நியூசிலாந்து அணியின் துவக்க ஆட்டக்காரர் டாம் லாதம் விக்கெட்டை வீழ்த்திய தமிழக வீரர் அஸ்வின். உள்ளே வந்த நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன்.