WTC 2021 LIVE : உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் - இந்தியா vs நியூசிலாந்து பலப்பரீட்சை!
World Test Championship Final 2021, Ind vs NZ: 144 ஆண்டு கால டெஸ்ட் வரலாற்றில் முதல் முறையாக நடைபெறும் டெஸ்ட் உலகக்கோப்பை சாம்பியன்ஷிப்!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் முதல் நாள் ஆட்டம் கைவிடப்பட்டது என பிசிசிஐ அறிவிப்பு!
இந்திய அணியை மழை காப்பாற்றிவிட்டது என மைக்கேல் வாஹன் நக்கல் ட்வீட்.
ரசிகர்களுக்கு ஒரு நற்செய்தி என்று டைப் செய்வதற்குள் - மீண்டும் சவுதாம்ப்டன் மைதானத்திற்கு திரும்பிய மழை.
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நாளை இங்கிலாந்தில் தொடங்க உள்ளது. இந்தப் போட்டியில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை செய்ய உள்ளன. இந்த இறுதிப்போட்டிக்கு ரசிகர்கள் இடையே பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு 1.6 மில்லியன் அமெரிக்க டாலர் பரிசு தொகையும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் மேஸ் ஆகியவை தரப்படும். இந்தச் சூழலில் அந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் மேஸ் வடிவம் தொடர்பாக ஐசிசி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை செய்துள்ளது.
கட்டுரையை வாசிக்க: https://bit.ly/2TL3Y4Z
முதல் செஷன் போட்டி முழுவதும் மழையால் பாதிப்பு. மழையின் தீவிரம் சற்றே குறைந்தாலும், மைதானத்தில் மழை நீர் அதிக அளவில் தேங்கியிருக்கிறது. மைதானத்தில் இருந்து நீரை வெளியேற்ற ஊழியர்கள் தொடர் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் முதலிடத்தை பிடித்த இந்திய அணி, 17 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி - அதில் 12 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்று, 4 டெஸ்ட் போட்டிகளில் தோல்வியை சந்தித்து, ஒரு டெஸ்ட் போட்டியை டிரா செய்து 520 புள்ளிகளுடன் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியை எட்டியது. டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் 2வது இடத்தை பிடித்த நியூசிலாந்து அணி 7 டெஸ்ட் போட்டிகளை வென்று 420 புள்ளிகளுடன் இறுதிப் போட்டிக்கு வந்தது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி தொடங்குவதில் தாமதம். 3 மணிக்கு துவங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்த இறுதி போட்டி மழையால் பாதிப்பு. ஐந்து நாட்களுமே மிரட்டும் வானிலை நீடிப்பதால், முழுமையான போட்டி நடைபெறுமா ?
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் 2.30 மணிக்கு வீசப்படவேண்டிய டாஸ் மழை காரணமாக தாமதம். 3 மணிக்கு திட்டமிட்டபடி போட்டி தொடங்குவதில் சிக்கல்.
Background
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரலாற்றின் முதல் பைனல் இன்று இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டன் மைதானத்தில் தொடங்குகிறது. இதில் நீயா, நானா என வரிந்து கட்டுகின்றன இந்தியாவும் நியூசிலாந்தும்.
ஒருபக்கம் விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி இன்னொரு பக்கம் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி. ஆக்ரோஷமாக களத்தில் செயல்படக்கூடியவர் விராட் கோஹ்லி, அதே நேரம் கூலாக அணியை வழி நடத்துபவர் கேன் வில்லியம்சன். அதனால் இந்த இவருக்கும் இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியை ஃபையர் vs கூல் என வர்ணிக்கலாம்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -