உலக டேபிள் டென்னிஸ் போட்டித்தொடர் சென்னை வண்டலூர் அருகே, மேலக்கோட்டையூரில் உள்ள தமிழ்நாடு உடற்பயிற்சி கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழக மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்திய டேபிள் டென்னிஸ் சம்மேளனம் மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் உலக இளைஞர் யூத் கன்டென்டா் மற்றும் பீடர் சீரிஸ் டேபிள் டென்னிஸ் போட்டி நடத்தப்பட உள்ளது. 

Continues below advertisement

13 நாட்டு வீரர், வீராங்கனைகள் பங்கேற்பு

நாளை முதல் நவம்பர் ஒன்றாம் தேதிவரை நடைபெற உள்ள இப்போட்டித்தொடரில் 13 நாடுகளை சோ்ந்த 334 வீரா், வீராங்கனைகள் பங்கேற்பார்கள் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது. வீரர், வீராங்கனைகள் முறையே கன்டென்டா் பிரிவில் 210 பேரும், பீடா் தொடரில் 124 பேரும் களம் காண உள்ளனர். இந்தியா தரப்பில்  சத்யன், அபினந்த் பிரதிவாதி, தியா சிட்லே, சுதிா்தா முகா்ஜி உள்ளிட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

உலக யூத் சாம்பியன்ஷிப் போட்டிக்கு முன்மாதிரி

 சிறுவர், சிறுமியருக்கு ஒற்றையர் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவு என மொத்தமாக 12 பிரிவுகளில் இப்போட்டித்தொடர் நடத்தப்பட உள்ள நிலையில், நவம்பர் மாதம் துருக்கியில் நடைபெற உள்ள உலக யூத் டேபிள் டென்னிஸ் போட்டிக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் இப்போட்டித்தொடர் அமையுமென விளையாட்டு வீரர்கள் மற்றும் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். 

Continues below advertisement