சர்வதேச டென்னிஸ் பெண்கள் ஒற்றையர் பிரிவு தரவரிசையில் நம்பர் 1 இடத்தில் இருக்கும் ஆஸ்திரேலிய வீராங்கனை ஆஷ்லி பார்டி டென்னிஸில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார். அவருக்கு வயது 25.
மூன்று கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றிருக்கும் ஆஷ்லி, திடீரென இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். இது தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பதிவில் வீடியோ வெளியிட்டிருக்கும் அவர், “டென்னிஸ் விளையாட்டின்மீது எனக்கு இருக்கும் அன்பு நிற்கப்போவதில்லை. டென்னிஸ் எனது வாழ்வில் ஒரு மிகப்பெரிய அங்கமாக இருந்திருக்கிறது. நான் டென்னிஸில் கற்றுக்கொண்ட அனுபவத்தை மறக்க முடியாது. ஆனால், வாழ்வின் புதிய பகுதியை ஏற்றுக்கொள்ள வேண்டும். இனி ஆஷ்லி பார்டி விளையாட்டு வீராங்கனையாக இருக்கப்போவதில்லை” என தெரிவித்திருக்கிறார்.
அவர் 2022 ஆஸ்திரேலிய கிராண்ட் ஸ்லாம் தொடரில் பட்டம் வென்று இன்னும் இரண்டு மாதங்கள் கூட முடிவடையாத நிலையில், டென்னிஸில் இருந்து அவர் ஓய்வு அறிவித்திருப்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஆஷ்லியின் இந்த அறிவிப்புக்கு டென்னிஸ் வட்டாரத்தில் வாழ்த்துகள் குவிந்து வருகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்