மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான அனுமதிச் சீட்டை சிபிஎஸ்இ வெளியிட்டுள்ளது. தேர்வர்கள் ctet.nic.in என்ற இணைப்பை க்ளிக் செய்து, ஹால் டிக்கெட்டைப் பெற்றுக் கொள்ளலாம்.


தேர்வு எதற்கு? ஏன்?


சிடெட் என்னும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு (Central TEACHER ELIGIBILITY TEST - CTET) மொத்தம் 2 தாள்களைக் கொண்டது. முதல் தாளில் தேர்ச்சி பெறுபவர்கள் இடைநிலை ஆசிரியராக 1 முதல் 5ஆம் வகுப்பு வரை பணியாற்றத் தகுதியானவர்கள். 2ஆம் தாளில் தேர்ச்சி அடைபவர்கள் பட்டதாரி ஆசிரியராக 6 முதல் 8ஆம் வகுப்பு வரை பணிபுரியலாம்.


மத்திய அரசின் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவோர், கேந்திரிய வித்யாலயா பள்ளிகள், நவோதயா வித்யாலயா பள்ளிகள், மத்திய திபெத்தியன் பள்ளிகளில் சேர்ந்து பணிபுரியலாம். அதேபோல மாநிலங்களைச் சேர்ந்த அரசுப் பள்ளிகளிலும் பணியாற்றலாம். 


தேர்வு எப்போது?


2024ஆம் ஆண்டுக்கான 18ஆவது தேசிய தகுதித் தேர்வின் 2ஆவது அமர்வு சிடெட் தேர்வு நாடு முழுவதும் டிசம்பர் 14 ஆம் தேதி நடைபெற உள்ளது. நாடு முழுவதும் 20 மொழிகளில் 135 நகரங்களில் நடைபெற உள்ளது. கணினி முறையில் 2 ஷிஃப்டுகளாகத் தேர்வு நடைபெறுகிறது.


ஒரே நாளில் 2 தாள்களுக்கும் தேர்வு


ஒவ்வொரு தேர்வும் 2.30 மணி நேரத்துக்கு நடைபெறுகிறது. குறிப்பாக டிசம்பர் 1 காலை 9.30 மணி முதல் 12 மணி வரை முதல் தாளும் மதியம் 2.30 முதல் 5 மணி வரை 2ஆவது தாளும் தகுதித் தேர்வு நடைபெறுகிறது. வினாத்தாள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் கேட்கப்படும்.


தேர்வு இந்தியா முழுவதும் நாளை மறுநாள் நடைபெற உள்ள நிலையில் தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று (டிச.12) வெளியிடப்பட்டுள்ளது.


ஹால் டிக்கெட்டைப் பெறுவது எப்படி? (Steps to download admit cards)



  • தேர்வர்கள் ctet.nic.in என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.

  • முகப்புப் பக்கத்தில் CTET December 2024 admit card என்ற இணைப்பு தோன்றும். அதை க்ளிக் செய்யவும்.

  • அல்லது https://examinationservices.nic.in/examsysctet/root/Home.aspx?enc=Ei4cajBkK1gZSfgr53ImFfEytN2I3LFrLvNrMJcZJNnx30PznCVoaU9e1Vfdia78 என்ற இணைப்பையும் க்ளிக் செய்யலாம்.

  • தொடர்ந்து தேர்வர்கள் விண்ணப்ப எண், பிறந்த தேதி, பாதுகாப்புக் குறியீடு ஆகியவற்றை உள்ளிட்டே பெற முடியும்.  


கூடுதல் தகவல்களுக்கு: https://cdnbbsr.s3waas.gov.in/s3443dec3062d0286986e21dc0631734c9/uploads/2024/10/2024101010.pdf