இந்தியாவின் நட்சத்திர ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா உலக தடகள சாம்பியன்ஷிப்பில் தங்கப் பதக்கம் வென்று புதிய சாதனை படைத்துள்ளார். அண்டை நாடான பாகிஸ்தான் வீரர் இரண்டாம் பிடித்து வெள்ளி பதக்கத்தை தட்டி சென்றார். 


நேற்றைய போட்டியில் தங்கம் வென்றதன் மூலம் உலக தடகள சாம்பிடன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை நீரஜ் சோப்ரா படைத்தார்.  






போட்டியின் தொடக்கத்தில் நீரஜ் சோப்ரா சொதப்பலுடன் தொடங்கவே, அனைவரது மனதில் அதிர்ச்சி குடியேறியது. முதல் முயற்சிக்கு பிறகு நீரஜ் சோப்ரா 12வது இடத்தில் இருந்தார். அதன்பிறகு, விஸ்வரூபம் எடுத்த நீரஜ், இரண்டாவது சுற்றில் 88.17 மீ எறிந்து முதலிடம் பிடித்தார். அதே சமயம் ஜெர்மனியின் ஜூலியன் வெபர் இரண்டாவது சுற்றில் 85.79 மீட்டர் தூரம் எறிந்து இரண்டாமிடம், செக் குடியரசின் ஜேக்கப் வாட்லெச் 84.18 மீட்டர் எறிந்து மூன்றாவது இடத்தைப் பிடித்தனர்.






மூன்றாவது சுற்று:


மூன்றாவது சுற்றில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா 86.32 மீட்டர் தூரம் எறிந்து அனைத்து வீரர்களின் கனவுகளையும் துவம்சம் செய்தார்.  இதே மூன்றாவது சுற்றில் பாகிஸ்தானின் அர்ஷத் நதீம் 87.82 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்தார். இதன்மூலம், நீரஜுக்கு தங்கமும், பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீமுக்கு வெள்ளிப் பதக்கமும் வென்றனர். 


 இதற்கு முன், நீரஜ் சோப்ரா ஒலிம்பிக் தவிர டயமண்ட் லீக்கில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். அதே சமயம் தற்போது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று பெரிய சாதனை ஒன்றை தனது பெயரில் படைத்துள்ளார் நீரஜ் சோப்ரா. 






நீரஜ் சோப்ராவின் சாதனை: 


இந்தியாவின் நட்சத்திர ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா, செக் குடியரசின் ஜான் ஜெலெஸ்னி மற்றும் நார்வேயின் ஆண்ட்ரியாஸ் தோர்கில்ட்சென் ஆகியோருக்குப் பிறகு, ஒரே நேரத்தில் ஒலிம்பிக் மற்றும் உலக சாம்பியன்ஷிப் பட்டங்களை வென்ற மூன்றாவது வீரர் என்ற வரலாறு படைத்தார். 


ஜெலெஸ்னி 1992, 1996 மற்றும் 2000 இல் ஒலிம்பிக் தங்கத்தை வென்றார், அதே நேரத்தில் 1993, 1995 மற்றும் 2001 இல் உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றார். தோர்கில்ட்சென் 2008 ஒலிம்பிக் மற்றும் 2009 உலக சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்றார்.


25 வயதான நீரஜ், ஒலிம்பிக் (டோக்கியா 2021), ஆசிய விளையாட்டு (2018) மற்றும் காமன்வெல்த் விளையாட்டு (2018), u-20 உலக சாம்பியன்ஷிப் (2016) டயமண்ட் லீக் (2022) என அனைத்திலும் தங்க பதக்கத்தை வென்றுள்ளார்.